தொடரும் மனிஷ் பாண்டேவின் சோகக்கதை. இந்த தொடரிலும் அதே நிலைமை தானா ? – விவரம் இதோ

Pandey-1
- Advertisement -

இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்று இந்தியா திரும்பியுள்ளது. இந்நிலையில் தற்போது தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இருக்கிறது.

Ind

இந்த தொடர் வரும் 12ஆம் தேதி துவங்க உள்ள இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் ஆறு மாதங்கள் காயத்தால் அணிகள் இடம் பெறாமல் தவித்து வந்த ஆல்ரவுண்டர் ஹர்டிக் பாண்டியா மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார்.அதேபோல நியூஸிலாந்து தொடருக்கு முன்பாக காயத்தின் காரணமாக விளையாடிக் கொண்டு விலகிய ஷிகர் தவான் மற்றும் பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

- Advertisement -

ஏற்கனவே தேர்வுக் குழுவின் தலைவராக இருந்த எம்எஸ்கே பிரசாத் தலைமையிலான தேர்வுக் குழுவின் பதவிக் காலம் முடிவடைந்ததை அடுத்து தற்போது சுனில் ஜோஷி தலைமையிலான தேர்வு குழுவினர் இந்த அணியை தேர்வு செய்துள்ளனர்.

pandey 1

இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணியில் தொடர்ந்து மனிஷ் பாண்டே இடம்பெற்றுள்ளார். கடந்த பல தொடர்களாகவே இந்திய அணியில் இடம்பெற்று வரும் மனிஷ் பாண்டே அவ்வப்போது வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவ்வாறு அவர் கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் தொடர்ந்து அவர் சரியாக பயன்படுத்தி வருவதால் தொடர்ந்து அணியில் நீடித்து வருகிறார்.

- Advertisement -

ஜாதவ் இந்திய அணியில் நீக்கப்பட்டு மனிஷ் பாண்டே தற்போது தொடர்கிறார். இருப்பினும் ஆடும் லெவனில் மனிஷ் பாண்டே இந்த தொடரில் விளையாடுவது கடினமாக உள்ளது. ஏனெனில் ராகுல் ஐந்தாம் இடத்திலும், பாண்டியா ஆறாம் இடத்திலும் வரும் தொடரில் விளையாட இருப்பதால் மனிஷ் பாண்டேவை எந்த இடத்தில் இறக்குவது என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Pandey

ஏற்கனவே தவான் மற்றும் ப்ரித்வி ஷா ஆகியோர் துவக்க வீரர்களாகவும் கோலி மற்றும் ஐயர் மூன்று மற்றும் நான்காம் இடத்தில் ஆடுவார்கள் என்பதால் மனிஷ் பாண்டே விளையாடுவது கடினமாக உள்ளது. மேலும் இதுகுறித்து ரசிகர்கள் குறிப்பிடுவது யாதெனில் எத்தனை தொடர்களாக இடம் பிடித்தாலும் அவருக்கான வாய்ப்பு குறைவாகவே இருக்கிறது அவர் என்ன பாவம் செய்தார் என்பது போல கமெண்ட்டுகளை பதிவு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement