அதிர்ஷ்டத்தால் தப்பிய மனிஷ் பாண்டே. நல்ல வேலை கடவுள் இருக்காருங்க – விவரம் இதோ – INDvsNZ

Pandey-1
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்து ஏற்கனவே தொடரை இழந்தது. இந்நிலையில் வாஷ் அவுட் ஆகும் நிலைமையை தவிர்க்க இந்திய அணி இந்த போட்டியில் வெற்றிபெற்றே ஆகவேண்டும்.

Pandey

இந்த தொடரின் மூன்றாவது போட்டி இன்று மவுண்ட் மாங்கனி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணியில் ஒரு முக்கிய மாற்றமாக ஜாதவிற்கு பதிலாக தொடர்ந்து பின்வரிசையில் சிறப்பாக விளையாடி வரும் மனிஷ் பாண்டே அணியில் சேர்க்கப்ட்டுள்ளார்.

- Advertisement -

ஐயர் அரைசதம் கடந்து 62 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் 6 ஆவது வீரராக மனிஷ் பாண்டே களமிறங்கினார். இந்த போட்டியில் 43 ஆவது ஓவரின் போது ஈஸியான ரன்அவுட் வாய்ப்பு ஒன்றில் மனிஷ் பாண்டே தப்பித்தார். அந்த 43 ஆம் நான்காவது பந்தில் ஒரு ரன் அடித்த மணிஷ் பாண்டே ரன்னிங் ஓடும் போது பந்து பீல்டரின் கைகளுக்கு செல்ல ராகுல் ஓடிவிட்டார்.

Pandey

மணிஷ் பாண்டே கிரீஸை அடைவதற்கு முன்னர் சாண்ட்னர் பந்தை கையில் பிடித்தாலும் அதற்கு முன்னதாக அவரது கால்கள் ஸ்டம்பில் பட்டது. இதனால் எளிய வாய்ப்பில் இருந்து அதிர்ஷ்டம் மூலம் மணிஷ் பண்டே தப்பித்தார். மேலும் ஜாதவுக்கு பதிலாக இந்த போட்டியில் விளையாடி வரும் மணிஷ் பண்டே சிறப்பான ஆட்டத்தை இதுவரை வெளிப்படுத்தி வருகிறார்.

இதுவரை 46 பந்துகளில் 41 ரன்கள் குவித்து இருக்கும் அவர் ராகுலுடன் 95 பந்துகளில் 101 ரன் பார்ட்னர்ஷிப் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி வரும் மனிஷ் பாண்டேவிற்கு இந்த போட்டியில் அரைசதம் கடக்க ஒரு அருமையான வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement