திருமணமாகி 3 வாரங்கள் ஆகியும் ஹனிமூன் செல்லாத மனிஷ் பாண்டே – காரணம் இதுதானாம்

Pandey

இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மணீஷ் பாண்டே இந்திய அணிக்காக கடந்த 2015ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் அறிமுகமானார். அதன் பின்னர் இந்திய அணியில் வருவதும் போவதுமாக உள்ள மனிஷ் பாண்டே தொடர்ந்து இந்திய அணிக்காக விளையாடி வருகிறார்.

Pandey

மனிஷ் பாண்டே இந்திய அணிக்காக இதுவரை 23 ஒருநாள் போட்டிகளிலும், 32 டி20 போட்டியிலும் அவர் விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவருக்கு கடந்த டிசம்பர் 2ம் தேதி நடிகர் அர்ஷிதா ஷெட்டியுடன் திருமணம் நடைபெற்றது. இவர் தமிழில் சூப்பர் ஹிட் அடித்த உதயம் nh4 திரைப்படத்தின் கதாநாயகி என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களின் திருமணம் டிசம்பர் 2 ஆம் தேதி மும்பையில் நடைபெற்றது.

திருமணத்திற்கு முந்தைய நாள் மனீஷ் பாண்டே தலைமையிலான கர்நாடக அணி சையத் முஷ்டாக் அலி தொடரை கைப்பற்றியது. கோப்பையை வென்ற பின் அடுத்த நாளே அவரது திருமணம் நடைபெற்றது. அதன் பின்னர் அவர்கள் இதுவரை திருமணம் முடிந்து எந்த ஒரு கொண்டாட்டத்திலும் ஈடுபடவில்லை. ஏனெனில் திருமணம் முடிந்த கையோடு அவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரில் இடம் பெற்றிருந்ததால் அவர் இந்திய அணியுடன் இணைய வேண்டியதாயிற்று.

pandey 1

அதனால் இதுவரை மூன்று வாரங்கள் ஆகியும் மனிஷ் பாண்டே திருமண கொண்டாட்டம் மற்றும் ஹனிமூன் எதையும் மேற்கொள்ளவில்லை. ஏனெனில் அணியில் அவ்வப்போது வருவதும் போவதுமாக இருக்கும் மனீஷ் பாண்டே தனக்கான இடத்தை நிலைப்படுத்திக் கொள்ள இந்திய அணியில் விளையாட வேண்டும் என்று வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இணைந்தார். ஆனால் இந்த தொடர் முழுவதும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Pandey-1

இருப்பினும் விஜய் ஹசாரே டிராபி மற்றும் சையது முஷ்டாக் அலி டிராபி போன்ற தொடர்களை இவரது தலைமையிலான கர்நாடக அணி கைப்பற்றியது. அதுமட்டுமின்றி தனது நிலையான ஆட்டத்தின் மூலம் சிறப்பான பாமில் அவர் உள்ளது குறிப்பிடத்தக்கது.