அப்பாடா ஒருவழியா இவரை தூக்கிட்டீங்களா ? அப்போ இந்தியா கண்டிப்பா ஜெயிச்சிடும் – விவரம் இதோ – INDvsNZ

Pandey-1
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்து ஏற்கனவே தொடரை இழந்தது. இந்நிலையில் வாஷ் அவுட் ஆகும் நிலைமையை தவிர்க்க இந்திய அணி இந்த போட்டியில் வெற்றிபெற்றே ஆகவேண்டும்.

indvsnz

- Advertisement -

இந்த தொடரின் மூன்றாவது போட்டி இன்று மவுண்ட் மாங்கனி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணியில் ஒரு முக்கிய மாற்றமாக ஜாதவிற்கு பதிலாக தொடர்ந்து பின்வரிசையில் சிறப்பாக விளையாடி வரும் மனிஷ் பாண்டே அணியில் சேர்க்கப்ட்டுள்ளார்.

ஏற்கனவே தொடரை இழந்துவிட்டதாலும், திருப்தியற்ற ஆட்டத்தினாலும் மனிஷ் பாண்டேவிற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தீர்மானம் செய்தது. அதன்படி தற்போது முதலில் விளையாடி வரும் இந்திய அணி 24 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்களை அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

pandey 1

துவக்க வீரர் ப்ரித்வி ஷா 40 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். தற்போது ஸ்ரேயாஸ் ஐயர் (42) மற்றும் ராகுல் (29) விளையாடி வருகின்றனர். மனிஷ் பாண்டே அடுத்து களமிறங்க உள்ளார். அவரை அணியில் மீண்டும் விளையாட வைத்துள்ளதால் ரசிகர்கள் சற்று திருப்தி அடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement