மீண்டும் அணியில் இணைந்த 2 நட்சத்திர வீரர்கள். மே.இ தொடருக்கான இந்திய அணி – பி.சி.சி.ஐ அதிகாரபூர்வ அறிவிப்பு

Kohli
- Advertisement -

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடர் அடுத்தமாத துவக்கத்தில் தொடங்க உள்ளதால் அந்த தொடருக்கான இந்திய அணி இன்று தேர்வு செய்யப்பட்டது. இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது.

ind

- Advertisement -

இந்த தொடருக்கான இந்திய அணி இன்று மும்பையில் அறிவிக்கப்பட்டது இந்த தொடரில் தோனி இடம்பெறவில்லை அவருக்கு பதிலாக பண்ட் அணியில் இடம்பெற்றுள்ளார். மேலும் மூன்று வடிவ கிரிக்கெட்டுக்கும் மீண்டும் கோலி கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொடரில் ஒரு நாள் அணிக்கு மீண்டும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான மணிஷ் பாண்டே மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த முடிவு சரியாக இந்திய அணிக்கு கைகொடுக்கும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

pandey

இதோ இந்த தொடருக்கான ஒருநாள் தொடரின் இந்திய வீரர்கள் பட்டியல் : விராட் கோலி (கேப்டன்), ரோஹித், தவான், ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ரிஷப் பண்ட், ஜடேஜா, குல்தீப் யாதவ், சாஹல், கேதார் ஜாதவ், புவனேஷ்வர் குமார், ஷமி, சைனி, கலீல் அகமது

Advertisement