- Advertisement -
ஐ.பி.எல்

தந்தை இறந்த சோகத்தையும் அடக்கிக்கொண்டு களமிறங்கி விளையாடி நெகிழ்வைத்த பஞ்சாப் வீரர் – விவரம் இதோ

ஐபிஎல் தொடரின் 43வது போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் கே.எல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் வார்னர் முதலில் பந்து வீச்சை தீர்மானித்தார்.

அதன்படி முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்களை மட்டுமே அடித்தது. அதிகபட்சமாக நிக்கலஸ் பூரன் 32 ரன்களும், ராகுல் 27 ரன்களையும் குவித்தனர். அதன் பின்னர் 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணி தூக்கத்தில் சிறப்பாக விளையாடினாலும் பின்னர் இறுதிகட்டத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 19.5 ஓவர்களில் 114 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

- Advertisement -

அதிகபட்சமாக வார்னர் 35 ரன்களையும், விஜய்சங்கர் 26 ரன்களில் குவித்தனர். இதன்மூலம் 12 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி திரில் வெற்றி பெற்றது மட்டுமின்றி பிளே-ஆப் சுற்றுக்கு வாய்ப்பை தக்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டியில் வழக்கமாக பஞ்சாப் அணியில் கேப்டன் ராகுலுடன் களமிறங்கும் தவக்கவீரர் மாயங்க் அகர்வால் நேற்றைய போட்டியில் காயம் காரணமாக களம் இறங்கவில்லை. அவருக்கு பதிலாக மந்தீப் சிங் துவக்க வீரராக விளையாடினார். நேற்றைய போட்டியில் 14 பந்துகளை சந்தித்த அவர் ஒரு பவுண்டரி அடித்து 17 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

நேற்றைய போட்டியில் அவர் களமிறங்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பாக அவரது தந்தை இந்தியாவில் காலம் அடைந்தார் என்ற தகவல் அவருக்கு எட்டியது. இருப்பினும் பஞ்சாப் அணிக்கு நேற்றைய பபோட்டி மிகவும் முக்கியமான போட்டி என்பதால் அவர் அந்த சோகத்தை மறைத்து நேற்றைய போட்டியில் களம் இறங்கி விளையாடியது ரசிகர்களை நெகிழ வைத்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by