என்ன இருந்தாலும் கங்குலி இப்படி செய்திருக்க கூடாது. தலைவராக இருந்தாலும் அவர் செய்தது தவறு – மம்தா பேனர்ஜி கோபம்

- Advertisement -

தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இருந்தது. இந்த தொடரின் முதல் போட்டி தர்மசாலா நகரில் நடைபெற இருந்தது. ஆனால் போட்டி அன்று பெய்த மழை காரணமாக டாஸ் போடாமலே போட்டி கைவிடப்பட்டது.

Rain-1

மேலும் அதனை தொடர்ந்து நடைபெற இருந்த மீதமிருந்த இரண்டு ஒருநாள் போட்டிகளும் கரோனா வைரஸ் தாக்கத்தின் எதிரொலியாக பாதிக்கப்பட்டு இந்த ஒருநாள் தொடர் ரத்து செய்யப்பட்டது. இந்த ஒருநாள் தொடரின் மூன்றாவது போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்க இருப்பதாக இருந்தது.

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடர் ரத்து செய்தது குறித்து கொல்கத்தா முதலமைச்சர் மம்தா பானர்ஜியிடம் எந்த தகவலும் அளிக்காமல் கங்குலி ரத்து செய்திருக்கிறார். இதன் காரணமாக தற்போது கொல்கத்தா முதல்வர் மம்தா பானர்ஜி அதிருப்தியில் உள்ளதாக தெரிகிறது. இது குறித்து அவர் கூறியதாவது :

கங்குலியுடன் எல்லா விஷயங்களும் சரியாகத்தான் சென்று கொண்டிருக்கிறது. ஆனால் அவர் இது குறித்து ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம். அப்படி ஏதும் செய்யவே இல்லை. கொல்கத்தா போட்டியை நடத்த திட்டமிட்டிருந்த போது குறைந்தது கொல்கத்தா போலீஸ் இடமாவது தெரிவித்திருக்க வேண்டும்.

- Advertisement -

மாநில தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர் அல்லது காவல்துறை தலைமை அதிகாரி ஆகியோருக்கு யாராவது ஒருவராவது சொல்லியிருக்க வேண்டும். ஒரு முடிவை எடுத்துவிட்டு பின்னர் அதனை எங்களுக்கு தெரிவிப்பதற்கும், முன்னரே ஆலோசனை செய்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது என்று கூறியுள்ளார் மம்தா பானர்ஜி.

Ganguly

கங்குலியின் இந்த செயலால் அவர் அதிருப்தி அடைந்திருந்தாலும் இந்த விடயத்தில் அவரது முடிவு சரியானதுதான் என்று ரசிகர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த விவகாரத்தை பெரிதாக வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

Advertisement