ஈஸியா இருக்குற இடத்துல ஏன் கஷ்டப்படுறீங்கன்னு எனக்கு புரியல. இலங்கை வீரர்களை திட்டி புலம்பிய – மலிங்கா

- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் இறுதி டி20 போட்டி நேற்று புனே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி இந்தியாவை பேட்டிங் செய்ய பணித்தது. அதன்படி இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் குவித்தது. ராகுல் மற்றும் தவான் ஆகியோர் அதிகபட்சமாக அரைசதம் அடித்தனர்.

toss

- Advertisement -

அதன் பின்னர் 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இலங்கை அணி 15.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 123 ரன்களை மட்டுமே குவித்தது. இதனால் இந்திய அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்திய அணி சார்பாக சைனி சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றி தொடர்நாயகன் விருதை தட்டிச்சென்றார்.

இந்த போட்டியின் தோல்விக்கு பிறகு பேசிய இலங்கை அணியின் கேப்டன் மலிங்கா கூறியதாவது : இது போன்ற சூழ்நிலைகளில் பந்து வீசுவதை கற்றுக்கொள்ள வேண்டும். பந்துவீச்சில் இன்னும் முன்னேற்றம் இருந்தால் தான் இந்தியா போன்ற அணிகளை கட்டுப்படுத்த முடியும். பேட்டிங்கில் கடைசி 3 ஓவர்களில் இந்திய அணி ஆட்டத்தை அவர்களின் பக்கம் கொண்டு சென்றது. இந்திய அணி கடைசி கட்டத்தில் சிறப்பாக பேட்டிங் செய்தனர்.

saini 1

அதேபோன்று இலங்கை அணி பேட்டிங் செய்யும்போது டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் விரைவாக ஆட்டமிழந்து வெளியேறினர். ஆனால் இந்த மைதானத்தில் ஈசியாக பேட்டிங் செய்ய முடியும் என்பதை தனஞ்செயாமற்றும் மேத்யூஸ் ஆகியோர் அவர்களது பேட்டியின் மூலம் நிரூபித்தனர் ஆகவே இதுபோன்ற சூழ்நிலையில் எவ்வாறு விளையாட வேண்டும் எனபதனையும் கற்றுக்கொள்ள வேண்டும்.

malinga

எனவே இதுபோன்ற சூழ்நிலையில் ஆடுவதை கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் உலகக் கோப்பை அருகில் இருப்பதால் இந்த அணியில் உள்ள பெரும் பகுதியான வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் உங்களது ஆட்டத்தை இன்னும் முன்னேற்ற வேண்டும் என்று மலிங்கா புலம்பியவாறு பேட்டி அளித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement