எங்களின் இந்த சிறப்பான வெற்றிக்கு இதுவே காரணம் – பங்களாதேஷ் கேப்டன் பெருமிதம்

Mahmudullah

பங்களாதேஷ் கிரிக்கெட் அணி தற்போது இந்திய அணியுடனான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டி20 போட்டி நேற்று இரவு 7 மணிக்கு டெல்லி அருண்ஜேட்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பந்து வீச தீர்மானம் செய்தது.

ind 3

அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக தவான் 41 ரன்களும், பண்ட் 27 ரன்கள் குவித்தனர். மேலும் இறுதி நேரத்தில் க்ருனால் பாண்டியா மற்றும் சுந்தர் அதிரடியாக விளையாடியது குறிப்பிடத்தக்கது. பின்னர் 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பங்களாதேஷ் அணி 19.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் பங்களாதேஷ் அணியின் சீனியர் வீரரான முஷ்பிகுர் ரஹிம் 43 பந்துகளில் 60 ரன்கள் அடித்து வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்து ஆட்ட நாயகன் விருதையும் பெற்றார். பங்களாதேஷ் அணி இந்தியாவுக்கு எதிராக பெற்ற முதல் டி20 போட்டி வெற்றி இதுவாகும். இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய பங்களாதேஷ் அணியின் கேப்டன் முஹம்மதுல்லா கூறியதாவது : நாங்கள் இன்றைய போட்டியை அனைத்து விதத்திலும் சிறப்பாக துவங்கினோம் என்று நினைக்கிறேன்.

Ban 3

எங்களது பந்து வீச்சாளர்கள் சிறப்பான பணியை செய்து முடித்துள்ளார்கள். அவர்கள் இந்திய அணியை சரியான நேரத்தில் கட்டுக்குள் கொண்டுவந்து இலக்கை எளிமைப்படுத்தினார்கள் இதுபோன்ற சூழ்நிலைகளில் கேப்டன்சி செய்வது என்பது கடினம் இல்லை என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் வீரர்கள் சிறப்பாக விளையாடுகிறார்கள் மேலும் சவுமியா சர்க்கார் மற்றும் ரஹீம் ஆகியோர் தங்களது கடமையை புரிந்து சரியான முறையில் பேட்டிங் செய்தனர் அவர்கள் அமைத்த சிறந்த பார்ட்னர்ஷிப் இந்த போட்டியின் வெற்றிக்கு காரணம் என்று கேப்டன் பாராட்டிப் பேசினார்.

- Advertisement -