வெற்றிக்கான வாய்ப்பிருந்தும் இறுதியில் நாங்கள் தோல்வி அடைய இதுவே காரணம் – மஹமதுல்லா வருத்தம்

Mahmudullah
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் இறுதி டி20 போட்டி நேற்று நாக்பூர் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை பங்களாதேஷ் அணி தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்கள் 5 விக்கெட் இழப்பிற்கு முடிவில் 174 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பாக ஐயர் 62 ரன்களும் லோகேஷ் ராகுல் 52 ரன்களும் அடித்து அணியின் ரன் குவிப்புக்கு உதவினர்.

Deepak-Chahar

- Advertisement -

பின்னர் 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பங்களாதேஷ் அணி 19.2 ஓவர்களில் 144 ரன்களே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்திய அணியின் பந்து வீச்சாளரான தீபக் சாஹர் சிறப்பாக பந்து வீசி 7 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது இவருக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய பங்களாதேஷ் அணியின் கேப்டன் முஹமதுல்லா கூறியதாவது : நாங்கள் ஆரம்பத்தில் 2 விக்கெட்டுகளை இழந்து போதும் நயீம் மற்றும் மிதுன் ஆகியோர் அமைத்த பார்ட்னர்ஷிப் பில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெறுவோம் என்றே நினைத்தேன். ஆனால் இறுதியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஆரம்பித்தோம். 5 ஓவர்கள் 49 ரன்கள் என்று இருந்த நிலையை கூட எனக்கு வெற்றிக்கான வாய்ப்பு இருப்பதாக தோன்றியது.

Chahar

ஆனால் நாங்கள் அதை தவறவிட்டு விட்டோம் எங்கள் அணி வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர் இருப்பினும் சரியாக முடிக்க முடியவில்லை. இந்திய அணி வீரர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள் நாங்கள் சிறப்பாக துவங்கிய இந்த போட்டியில் தோல்வி அடையக் காரணம் இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சு தான் என்று குறிப்பிட்டு முஹமதுல்லா பேட்டியை முடித்தார்.

Advertisement