ரோஹித் மற்றும் தவான் நன்றாக விளையாடினாலும் எங்களின் தோல்விக்கு இவரே காரணம் – முஹமதுல்லா பேட்டி

Mahmudullah
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி நேற்று ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் குவித்தது.

Dhawan

- Advertisement -

அதன் பின்னர் 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. துவக்க வீரரான ரோகித் சர்மா மற்றும் தவான் சிறப்பான துவக்கத்தை அளித்து முதல் விக்கெட்டுக்கு 118 ரன்கள் சேர்த்தனர். சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா 43 பந்துகளில் 85 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பின்னர் இந்திய அணி 18.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது. கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி 85 ரன்கள் குவித்து அதன் மூலம் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

போட்டி முடிந்து தோல்வி குறித்துப் பேசிய பங்களாதேஷ் அணியின் கேப்டன் முகமதுல்லா கூறியதாவது : நாங்கள் முதலில் பேட்டிங் நன்றாக செய்ததாக நினைக்கிறோம். 180 ரன்கள் அடித்து இருந்தால் அது இந்திய அணி சுருட்ட போதுமானதாக இருந்திருக்கும். ஆனால் ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் சிறப்பாக விளையாடி எங்களிடமிருந்து வெற்றியை பறித்தனர்.இருப்பினும் நாங்கள் ரன்களை குறைவாக அடிக்க காரணம் யாதெனில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் சாஹல் சிறப்பான முறையில் பந்துவீசி எங்களது ரன் குவிப்பை கட்டுப்படுத்தினார்.

Chahal

மேலும் எங்கள் அணியிலும் இதே போன்று அமினுல் சிறப்பாக பந்துவீசினார். இனிமேலும் அவர் தொடர்ந்து இதே போன்று சிறப்பாக பந்து வீசுவார் என்று நினைக்கிறேன். நாக்பூர் மைதானம் சிறந்த மைதானமாக இருக்கும் என்று நினைக்கிறேன். எனவே கடைசி t20 போட்டியில் அதிக ரன்கள் குவிக்க முயற்சிப்போம் என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement