எந்த கிரிக்கெட் வீரரை மாதுரிதீக்க்ஷட் தீவிரமாக காதலித்தார் தெரியுமா..?

mathuridixit
- Advertisement -

இந்திய கிரிக்கெட்டிற்கும்,பாலிவுட் சினிமாவிற்கும் எப்போதும் ஒரு நெருங்கிய தொடர்பு இருந்து தான் வருகிறது. இந்திய கிரிக்கெட் வீரர்கள் பல பேர் இந்தி நடிகைகளை காதலித்துள்ளனர். அதில் சிலரது காதல், திருமணத்திலும் முடிந்துள்ளது. இந்நிலையில் பிரபல இந்தி நடிகை மாதுரி தீட்சித் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மீது தான் காதலில் இருந்ததாக தெரிவித்துள்ளார்.

sunilgawaskar

- Advertisement -

கடந்த சில காலமாக மொஹமத் அஸாருதீன் – சங்கீதா பிஜிலானி , ஹர்பஜன் சிங்- கீதா பஸ்ரா தொடங்கி, சமீபத்தில் விராட் – அனுஸ்கா வரை பாலிவுட் மற்றும் இந்திய கிரிக்கெட்டிற்கான பந்தம் நீண்டு கொண்டு தான் வருகிறது. இந்நிலையில் பாலிவுட் நடிகையான மாதுரி தீட்சித், தன்னைவிட 18 வயது மூத்தவரான முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் மீது, ஒரு கிறக்கத்தில் இருந்ததா சில ஆண்டுகளுக்கு முன்னர் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

தற்போது 51 வயதாகும் மாதுரி தீட்சித், பாலிவுட் சினிமாவில் பல ஆண்டுகளாக நடித்து வருகிறார். இவர் தனது இளம் வயதில் இந்திய வீரரான சுனில் கவாஸ்கரின் ஆட்டத்தின் மீது மிகவும் கவரப்பட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் அவர் மீது ஒரு தனிப்பட்ட காதலை வைத்துள்ளார் மாதுரி தீட்சித். இந்த தகவல் அவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் அளித்த பேட்டி ஒன்றில் இருந்து சமீபத்தில் கிடைக்கப்பெற்றுள்ளது

Madhuri-Sunil

1992 ஆம் ஆண்டு நடிகை மாதுரி தீட்சித், இந்திய டுடேவிற்கு அளித்த பேட்டி ஒன்றில் பங்குபெற்ற போது “நான் கவாஸ்கர் மீது பித்து பிடித்துள்ளேன், அவர் மிகவும் கவர்ச்சியாக இருக்கிறார். நான் அவர் பின்னலே ஓடி விட வேண்டும் என்று நினைக்கிறேன், அவர் என் கனவில் அடிக்கடி வருகிறார். அவரை எனக்கு மிகவும் பிடிக்கும்” என்று கூறியுள்ளார். மாதுரி தீட்சித் , இந்த பேட்டியை அளிக்கும் போது அவருக்கு 25 வயதும், கவாஸ்கருக்கு 43 வயதும் ஆகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement