மன்சூர் அலிகான் பட்டோடி – ஷர்மிளா தாகூர் ஆகட்டும், முகமது அசாருதீன் – சங்கீதா பிஜ்லானி ஆகட்டும், கீதா பஸ்ரா மற்றும் ஹர்பஜன்சிங் ஆகட்டும் சமீபகாலங்களில் அனுஷ்கா சர்மா – விராட்கோலி ஆகட்டும் இவர்களே இந்திய திரைத்துறை மற்றும் கிரிக்கெட் துறையினரின் பந்தத்திற்கான சான்று.
இந்திய திரைத்துறையினர் மீதும் கிரிக்கெட் வீரர்களுக்கும், கிரிக்கெட் வீரர்களுக்கு திரைத்துறையினர் மீதுமான ஈர்ப்பு எப்பொழுதும் இருந்து கொண்டே தான் உள்ளது.
சமீபத்தில் மாதுரி தீட்சித் சுனில் கவாஸ்கர் மீதான ஈர்ப்பையும் அன்பையும் வெளிப்படுத்தியுள்ளார்.மேலும் இருவரும் ஒன்றாக நடிக்கவும் ஆர்வமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
1992ம் ஆண்டு மாதுரி இந்தியா டுடேவிற்கு அளித்த பேட்டியில் சுனில் கவாஸ்கர் என்னை மிகவும் ஈர்த்தவர். அவர் மிகவும் வசீகரமானவரும் கூட. அவரது ஆட்டத்திற்கு நான் மிகப்பெரிய ரசிகை என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.