கில் இருக்கட்டும்.. இந்தியாவின் ஆல் ஃபார்மட் வருங்காலம் ஜெய்ஸ்வாலை ட்ராப் செய்யாதீங்க.. மதன் லால்

Madan Lal
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் வருங்காலமாக சுப்மன் கில்லை உருவாக்க பிசிசிஐ, தேர்வுக்குழு மற்றும் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மும்முரமாக வேலை செய்து வருகிறார்கள். அதற்காக ரோஹித் சர்மாவை ஒருநாள் கேப்டன்ஷிப் பதவியிலிருந்து நீக்கிய தேர்வுக்குழு அவரை புதிய கேப்டனாக தேர்ந்தெடுத்துள்ளது. டி20 அணியில் ஸ்ரேயாஸ் ஐயர், ஜெய்ஸ்வாலை கழற்றி விட்டுள்ள தேர்வுக்குழு அவரை துணை கேப்டனாக தேர்ந்தெடுத்துள்ளது.

இத்தனைக்கும் டி20 கிரிக்கெட்டில் அவர் கொஞ்சம் தடுமாற்றமாகவே விளையாடி வருகிறார். இருப்பினும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஏற்கனவே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள சுப்மன் கில்லை பிசிசிஐ இந்திய அணியின் முகமாக மாற்ற முயற்சித்து வருகிறது. இந்நிலையில் தம்மைப் பொறுத்த வரை ஜெய்ஸ்வால் இந்திய அணியின் வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பார் என்று முன்னாள் வீரர் மதன் லால் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

உண்மையான வருங்காலம்:

ஏனெனில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற சவாலான வெளிநாடுகளில் சதத்தை அடித்துள்ள ஜெய்ஸ்வால் மேட்ச் வின்னர் என்று அவர் பாராட்டியுள்ளார். அப்படிப்பட்ட ஜெய்ஸ்வாலை தாம் தேர்வுக்குழு தலைவராக இருந்தால் இந்திய அணியிலிருந்து நீக்கவே மாட்டேன் என்றும் தெரிவிக்கும் அவர் மறைமுகமாக அஜித் அகர்கரை சாடியுள்ளார். இது பற்றி மதன் லால் பேசியது பின்வருமாறு.

“ஒருவேளை நான் தேர்வாளராக இருந்தால் ஜெய்ஸ்வாலை எந்த ஃபார்மெட்டிலும் நீக்க மாட்டேன். ஒழுக்கமான மேட்ச் வின்னரான அவர் தம்முடைய திறமையை ஆஸ்திரேலியாவில் நிரூபித்துள்ளார். எனவே ஆசியக் கோப்பை, ஒருநாள் தொடர் அல்லது டெஸ்ட் போட்டி உட்பட எந்த வகையான ஃபார்மட்டாக இருந்தாலும் அவரைப் போன்றவர் எப்போதும் அணியில் இருக்க வேண்டும்”

- Advertisement -

மதன் லால் சாடல்:

“ஒருவர் உங்களுக்கு தனியாளாக போட்டியை வென்று கொடுத்தால் அவருக்கு நீங்கள் அனைத்து வகையிலும் ஆதரவு கொடுக்க வேண்டும். ஜெய்ஸ்வால் இந்திய கிரிக்கெட்டின் வருங்காலம். ஒருவேளை இந்த முடிவை எடுப்பது என்னுடைய கையில் இருந்தால் அவர் அனைத்து விதமான ஃபார்மட்டிலும் இந்தியாவுக்காக விளையாடுவார்” என்று கூறினார்.

இதையும் படிங்க: ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆஸி தொடருடன் ஓய்வு பெறுவார்களா? – ரவி சாஸ்திரி விளக்கம்

இது மட்டுமின்றி ஜெய்ஸ்வால் 100% ஆல் ஃபார்மட் பிளேயர் என்று முன்னாள் தேர்வுக்குழு தலைவர் மற்றும் கேப்டன் ஸ்ரீகாந்த் தெரிவித்திருந்தார். ஜெய்ஸ்வால் போன்ற ஆல் ஃபார்மட் பிளேயரை நீண்ட காலம் ஒருநாள், டி20 கிரிக்கெட்டில் புறக்கணிக்க முடியாது என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியிருந்தார். இருப்பினும் இந்திய அணி மட்டுமே அவருக்கு ஆல் ஃபார்மட்டில் வாய்ப்பு கொடுக்க மறுப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement