இந்திய அணியின் வீரரான இவர் எந்த சூழ்நிலையிலும் அசத்தலாக விளையாடும் திறன் உடையவர் – லயன் புகழாரம்

Lyon
- Advertisement -

கொரோனா தொற்று காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டும், ரத்து செய்யப்பட்டும் வருகின்றன. அந்த வகையில் இந்தியாவில் தற்போது மார்ச் 29ஆம் தேதி தொடங்க இருந்த ஐபிஎல் தொடர் ஏப்ரல் 15ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் அதற்கு அடுத்தும் இந்த தொடர் நடை பெறுவது சந்தேகம்தான் என்று தெரிகிறது. இந்தியாவில் மக்களின் இயல்புவாழ்க்கை திரும்பவே இன்னும் சில மாதங்கள் ஆகும் என்பதால் அடுத்த சில மாதங்களுக்கு கிரிக்கெட் போட்டி என்பது கிடையாது என்றே தோன்றுகிறது.

lyon 1

- Advertisement -

இதனால் இந்திய வீரர்கள் மட்டுமின்றி அனைத்து நாட்டு கிரிக்கெட் வீரர்களும் தற்போது தங்கள்து ஓய்வு நேரத்தை தங்களது வீட்டில் கழித்து வருகின்றனர். மேலும் சமூக வலைத்தளம் மூலம் ரசிகர்களுடன் அவ்வப்போது உரையாடுவது, அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பது அதுமட்டுமின்றி தங்களது வாழ்வில் நடந்த சுவாரசிய நிகழவுகளை பகிர்ந்து வருகின்றனர். #

அதன்படி தற்போது இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான
நேதன் லயன் இந்தியாவில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருக்கும் டெஸ்ட் தொடர் குறித்து தற்போது தனது கருத்தினை பகிர்ந்து கொண்டார். அதில் அந்த தொடர் குறித்த சில விடயங்களை வெளிப்படுத்தினார்.

இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலிய அணி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரில் கோலி எப்படி விளையாடுவார் என்று இப்போதே ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் யோசிக்க துவங்கி விட்டனர். மேலும் ஆஸ்திரேலியாவின் முதன்மை சுழற்பந்து வீச்சாளரான லயன் மற்றும் கோலி ஆகியோரிடையே இருக்கும் போட்டி பெரிதளவு பார்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்திய அணியின் கேப்டன் கோலி எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் ஏற்ப தன்னை மாற்றிக் கொள்வதில் சிறந்தவர். நான் மிச்செல் ஸ்டார்க் உடன் இது குறித்து பேசிய போது மைதானத்தில் ரசிகர்களே இல்லை என்றால் கோலி எப்படி செயல்படுவார் என்பதை காண அதிக ஆர்வமாக உள்ளதாக தெரிவித்தார்.

virat_kohli

ஆனால் கோலி ஒரு சூப்பர்ஸ்டார் எந்த நிலையிலும் அவரால் எந்த சூழ்நிலையிலும் சிறப்பாக விளையாட முடியும். ஆஸ்திரேலியாவில் இந்திய அணி பங்கேற்கும் கிரிக்கெட் தொடர் ஆஷஸ் தொடருக்கு இணையான மிகப்பெரிய தொடராகும். ரசிகர்கள் மைதானத்தில் இருந்தாலும் இல்லை என்றாலும் போட்டி நமது கட்டுப்பாட்டில் இருக்காது. தற்போது உள்ள சூழ்நிலையில் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் லயன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement