புனேவில் எப்படி ஜெய்க்கனும்ன்னு இந்தியாவே காமிச்சுட்டாங்க.. சுந்தர், அஸ்வின் வைத்த திட்டம் பற்றி ரோஞ்சி பேட்டி

Luke Ronchi
- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து விளையாடி வருகிறது. பெங்களூருவில் துவங்கிய அத்தொடரின் முதல் போட்டியில் 8 வித்தியாசத்தில் வென்ற நியூசிலாந்து 36 வருடங்கள் கழித்து இந்தியாவில் வெற்றி பெற்று முன்னிலை வகிக்கிறது. அந்த நிலையில் இத்தொடரின் இரண்டாவது போட்டி அக்டோபர் 24ஆம் தேதி புனேவில் துவங்கியது.

அப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய அந்த அணி டேவோன் கான்வே 76, ரச்சின் ரவீந்திரா 65 ரன்கள் எடுத்ததால் 201-4 என்ற நல்ல நிலையில் இருந்தது. ஆனால் அதன் பின் அபாரமாக பந்து வீசி நியூசிலாந்தை 259 ரன்களுக்கு சுருட்டிய இந்தியாவுக்கு தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 7, ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.

- Advertisement -

இந்தியாவை வைத்து:

பின்னர் விளையாடும் இந்திய அணி முதல் நாள் முடிவில் 16-1 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் சர்மா டக் அவுட்டான நிலையில் களத்தில் ஜெய்ஸ்வால் 6*, கில் 10* ரன்களுடன் உள்ளனர். இந்நிலையில் புனே பிட்ச்சில் பந்துகளை கொஞ்சம் மெதுவாக வீசினால் விக்கெட்டுகள் கிடைக்கும் என்பதை இந்தியாவின் சுந்தர், அஸ்வின் காண்பித்துள்ளதாக நியூசிலாந்து அணியின் துணைப் பயிற்சியாளர் லுக் ரோஞ்சி கூறியுள்ளார்.

அதை வைத்து 2வது நாளில் இந்தியாவை விரைவாக சுருட்டி வெற்றி பெறும் முயற்சிப்போம் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “முதல் சில மணி நேரங்களில் இந்தியர்கள் வேகமாக பந்து வீசியதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால் பின்னர் அவர்களின் ஸ்பின்னர்கள் தங்களுடைய வேகத்தை குறைத்தனர். அது கொஞ்சம் அதிக சுழல் மற்றும் வேகம் ஆகிவற்றை உருவாக்கியது”

- Advertisement -

இந்தியாவை வீழ்த்துவோம்:

“அதனால் ஆடுகளத்தில் வித்தியாசமான ரியாக்சன்களையும் உருவாக்க முடிந்தது. எனவே அதே போன்ற வியூகத்தை எங்களுடைய பந்து வீச்சில் நாங்கள் பயன்படுத்துவோம். குறிப்பாக வேகத்தில் மாற்றங்களை செய்வது முக்கியமாகும். வாஷிங்டன் சுந்தர் நீண்ட நேரம் நல்ல இடத்தில் பந்து வீசினார். சில பந்துகள் வெள்ளைக்கோட்டுக்கு அகலமாகவும் வந்தன”

இதையும் படிங்க: 227 ரன்ஸ்.. 20 வருட தனித்துவ சாதனை.. புதிய சாம்பியன் நியூஸிலாந்தை மந்தனா தலைமையில் வீழ்த்திய இந்தியா

“ரச்சின் ரவீந்தராவை கொஞ்சம் நேராகவும் அகலமாகவும் வீசி அவர் அவுட்டாக்கியது உண்மையிலேயே யாருக்கு எதிராகவும் வீச வேண்டிய சிறந்த பந்து. அதே போல நாளை நாங்கள் நல்ல இடங்களில் பந்து வீசி வித்தியாசமான பவுன்ஸை பெற்று இந்தியா மீது அழுத்தத்தை போட முயற்சிப்போம். முதல் நாளிலேயே சில பந்துகள் உயரமாக குதித்து வழுக்கிக்கொண்டு வந்ததை நாங்கள் பார்த்தோம். அதனால் நீங்கள் சிறப்பாக செயல்படுகிறீர்கள் உறுதியாக சொல்ல முடியாத அளவுக்கு இந்த ஆடுகளம் இருக்கிறது” என்று கூறினார்.

Advertisement