ஐபிஎல் 2022 : ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் முழு அணி – உத்தேச ப்ளேயிங் 11 இதோ

Rahul
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களை மையமாகக் கொண்ட புதிய 2 அணிகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக அந்த 2 அணிகளுக்கும் தேவையான வீரர்களை தேர்வு செய்யும் வண்ணம் கடந்த 2018க்கு பின் முதல் முறையாக அனைத்து அணிகளும் கலைக்கப்பட்டு இந்த வருடம் மெகா அளவில் வீரர்கள் ஏலம் நடைபெற்றது.

Lucknow

- Advertisement -

இந்த ஏலத்துக்கு முன்பாக புதிதாக தோற்றுவிக்கப்பட்ட லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணி தாங்கள் விரும்பும் 3 வீரர்களை தேர்வு செய்து கொள்ளலாம் என்ற சலுகை வழங்கப்பட்டது. அந்த வகையில் இந்தியாவின் நட்சத்திர வீரர் கேஎல் ராகுல், ஆஸ்திரேலியாவின் ஆல்-ரவுண்டர் மார்க்கஸ் ஸ்டோனிஸ் மற்றும் இளம் இந்திய வீரர் ரவி பிஷ்னோய் ஆகியோரை முதல் 3 வீரர்களாக லக்னோ அணி நிர்வாகம் ஒப்பந்தம் செய்தது.

லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்:
இதை அடுத்து நடந்த ஏலத்தில் அனைவரும் ஆச்சரியப்படும் வண்ணமாக இந்தியாவிற்காக இதுவரை விளையாடாத இளம் இந்திய வேகப்பந்துவீச்சாளர் அவேஷ் கானை 10 கோடிகளுக்கு அந்த அணி நிர்வாகம் கடும் போட்டிபோட்டு வாங்கியது. அதேபோல் வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஜேசன் ஹோல்டர் 8.75 என்ற மிகப்பெரிய தொகைக்கு லக்னோ அணியால் வாங்கப்பட்டார்.

Rahul kl

ஆனால் அதைவிட கடந்த வருடம் உள்ளூர் கிரிக்கெட்டில் பரோடா அணிக்காக விளையாடி அதில் சண்டை போட்டுக்கொண்ட இந்திய வீரர்கள் க்ருனால் பாண்டியா மற்றும் தீபக் ஹூடா ஆகியோர் ஒன்றாக லக்னோ அணியில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இறுதியில் அனுமதிக்கப்பட்ட 90 கோடி ரூபாய்களையும் முழுமையாக செலவு செய்த அந்த அணி நிர்வாகத்தால் 21 வீரர்களை மட்டுமே வாங்க முடிந்தது. இந்த அணியில் 14 இந்திய வீரர்களும் 7 வெளிநாட்டு வீரர்களும் உள்ளார்கள்.

- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் விளையாடுவதற்காக வாங்கப்பட்டுள்ள லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணியில் இடம் பிடித்துள்ள மொத்த வீரர்களின் விவரம் இதோ:
கேஎல் ராகுல் (17 கோடி), மார்கஸ் ஸ்டோனிஸ் (9.2 கோடி), ரவி பிஸ்னோய் (4 கோடி), குயின்டன் டீ காக்(6.75 கோடி), மனிஷ் பாண்டே (4.60 கோடி), மன்னன் வோஹ்ரா (20 லட்சம்), எவின் லெவிஸ் (2 கோடி), மார்க் வுட் (7.5 கோடி), அவேஷ் கான் (10 கோடி), அன்கிட் ராஜ்பூட் (50 லட்சம்), துஷ்மந்தா சமீரா (2 கோடி), ஷபாஸ் நதீம் (50 லட்சம்), மொஹ்சின் கான் (20 லட்சம்), மயங் யாதவ் (20 லட்சம்), ஜேசன் ஹோல்டர் (8.75 கோடி), தீபக் ஹூடா (5.75 கோடி), க்ருனால் பாண்டியா (8.25 கோடி), கே கெளதம் (90 லட்சம்), ஆயுஸ் படோனி (20 லட்சம்), கைல் மேயேர்ஸ்(50 லட்சம்), கரண் சர்மா (20 லட்சம்)

lucknow 1

இந்த மெகா ஏலத்தின் முடிவில் மொத்த அணியில் இருந்து களத்தில் விளையாட சரியாக பொருந்த கூடிய திறமையான 11 வீரர்களை தேர்வு செய்ய வேண்டிய பொறுப்பு அணி நிர்வாகத்துக்கு உள்ளது. அந்த வகையில்

இதையும் படிங்க : ஐபிஎல் 2022 : இம்முறை பவுலிங்கில் செம ஸ்ட்ராங்கானபஞ்சாப் கிங்ஸ்! முழு அணி, உத்தேச ப்ளேயிங் 11 இதோ

ஐபிஎல் 2022 தொடரில் கேஎல் தலைமையில் களமிறங்கப் போகும் 11 பேர் கொண்ட உத்தேச லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணி இதோ:
கேஎல் ராகுல் (கேப்டன்), குயின்டன் டீ காக்* (கீப்பர்), மார்கஸ் ஸ்டோனிஸ்*, மனிஷ் பாண்டே, தீபக் ஹூடா, க்ருனால் பாண்டியா, ஜேசன் ஹோல்டர்*, கே கெளதம், அவேஷ் கான், மார்க் வுட்*, ரவி பிஸ்னோய்.

Advertisement