- Advertisement -
ஐ.பி.எல்

சுயநலமானவர்கள் தேவையில்ல.. கேஎல் ராகுலை சாடிய சஞ்சீவ்.. லக்னோ தக்க வைத்த வீரர்களின் பட்டியல்

ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக அனைத்து அணிகளும் தாங்கள் தக்க வைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளன. அதில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி கடந்த வருடங்களில் கேப்டனாக செயல்பட்ட கேஎல் ராகுலை அதிரடியாக கழற்றி விட்டுள்ளது.

2018, 2019 காலகட்டங்களில் அதிரடியாக விளையாடிய ராகுல் 2022ஆம் ஆண்டு லக்னோ அணிக்காக வாங்கப்பட்டார். ஆனால் அந்த அணிக்கு வந்த பின் பெரிய ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை வென்று சாதனைகளை படைத்து தனது இடத்தையும் மார்க்கெட்டையும் தக்க வைத்துக் கொள்வதற்காக அவர் குறைந்த ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடினார். அதனால் லக்னோ அணி பல தருணங்களில் தோல்வியை கோட்டை விட்டது.

- Advertisement -

சுயநலமான வீரர்:

அதன் உச்சமாக கடந்த சீசனில் ஹைதெராபாத்துக்கு எதிராக ஒரு மிகவும் தடவலாக விளையாடிய ராகுல் லக்னோ தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தார். அதனால் அவரை பொதுவெளியில் அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோனேகா திட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சூழ்நிலையில் சுயநலமாக விளையாடும் கேஎல் ராகுல் போன்ற வீரர் தங்களுக்கு தேவையில்லை என்று சஞ்சீவ் கோனேகா மறைமுகமாக தெரிவித்துள்ளார்.

அதனாலேயே அவரை கழற்றி விட்டுள்ளதாக தெரிவிக்கும் சஞ்சீவ் இது பற்றி பேசியது பின்வருமாறு. “தங்களுடைய சொந்த சாதனைகள், தனிப்பட்ட இலக்குகள் ஆகியவற்றைப் பற்றி கவலைப்படாமல் அணியின் வெற்றிக்காக விளையாடும் வீரர்களை தேர்ந்தெடுப்பதே எங்களது முன்னுரிமை. அந்த வகையில் எங்களுடைய தக்க வைக்கும் வீரர்களை 2 நிமிடங்களில் முடிவெடுத்தோம்”

- Advertisement -

லக்னோ வீரர்கள்:

“மோசின் கான், ஆயுஷ் படோனி ஆகிய சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத வீரர்களை நாங்கள் தக்க வைத்துள்ளோம். அதை ஜகீர் கான், ஜஸ்டின் லாங்கர் ஆகிய பயிற்சியாளர்கள் முடிவு செய்தார்கள். நிக்கோலஸ் பூரானை தேர்ந்தெடுப்பது மூளையற்ற முடிவாக இருக்காது” என்று கூறினார். அந்த வகையில் நிக்கோலஸ் பூரானை லக்னோ 21 கோடிக்கு முதல் வீரராக தக்க வைத்துள்ளது.

இதையும் படிங்க: ஐபிஎல் 2025: மீண்டும் கேப்டனாக பாண்டியா.. ரோஹித், பும்ரா உட்பட மும்பை தக்க வைத்த டாப் 5 வீரர்களின் லிஸ்ட்

அடுத்ததாக 155 கி.மீ வேகத்தில் பந்து வீசி அசத்திய மயங் யாதவ் மற்றும் இளம் ஸ்பின்னர் ரவி பிஸ்னோய் ஆகியோரை தலா 11 கோடிக்கு லக்னோ நிர்வாகம் தக்க வைத்துள்ளது. பின்னர் மோசின் கான், ஆயுஷ் படோனி ஆகியோரை சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத வீரர்கள் பிரிவில் தலா 4 கோடிக்கு லக்னோ தக்க வைத்துள்ளது. இவர்களை தக்க வைக்க லக்னோ 51 கோடிகளை செலவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -