இந்திய அணியில் இவருடைய பெரிய ரசிகன் நான். இவருக்கு பந்துவீசுவது ரொம்ப கஷ்டம் – நியூஸி வீரர் வியப்பு

Ferguson

நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளராக இருப்பவர் லாக்கி பெர்குசன். கிட்டத்தட்ட 150 கிலோ மீட்டர் வேகத்தில் தொடர்ந்து பந்து வீசிக்கொண்டே இருப்பார். ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக ஆடி வருகிறார்.சென்ற வருடம் நடைபெற்ற உலக கோப்பை தொடரில் கூட 7 போட்டிகளில் ஆடி 21 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

ferguson 1

இந்நிலையில்கொரோனா ஓய்வு நேரத்தில் கிரிக்கெட் குறித்த தங்களது கருத்துக்களை தெரிவித்து வரும் கிரிக்கெட் வீரர்கள் வரிசையில் பெர்குசன் சமீபத்தில் ஒரு இணையதளத்திற்கு பேட்டியளித்த அவர், பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

அதில் குறிப்பாக எந்த பந்து பேட்ஸ்மேனுக்கு பந்து வீசுவது மிகவும் கடினம் என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது..

ferguson

ஸ்டீவன் ஸ்மித், டேவிட் வார்னர் மற்றும் விராட் கோலி ஆகிய மூவருக்கும் பந்து வீசுவது மிகவும் கடினமான செயல். இந்த மூவரில் யாரையும் விட்டுவிடக்கூடாது. துவக்கத்திலேயே இவர்களது விக்கெட்டை வீழ்த்த வேண்டும். இல்லையென்றால் நிச்சயம் இவர்கள் மூவரும் பந்துவீச்சாளர்களுக்கு கஷ்டத்தை கொடுப்பார்கள்.

- Advertisement -

இவர்கள் மூவரையும் தாண்டி ரோஹித் சர்மா உலகத்தரமான வீரர் நான் அவருடைய மிகப்பெரிய ரசிகன் என்று தெரிவித்துள்ளார். லாக்கி பெர்குசன் இவருக்கு தற்போது 29 வயதாகிறது ஒரு டெஸ்ட் போட்டி, 37 ஒருநாள் போட்டி, 8 டி20 போட்டிகளில் நியூசிலாந்து அணிக்காக விளையாடியுள்ளார் மொத்தம் 83 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.