வரலாற்றில் ஐசிசி அண்டர் 19 உலககோப்பைகளை வென்ற இந்திய கேப்டன்களின் பட்டியல் – லிஸ்ட் இதோ

u-19
- Advertisement -

ஐசிசி என்பது 18ஆம் நூற்றாண்டில் துவங்கி படிப்படியாக பல பரிணாமங்களை கண்டு வளர்ச்சி அடைந்த கிரிக்கெட் விளையாட்டை நிர்வகிக்க உருவாக்கப்பட்ட அமைப்பாகும். 19ஆம் நூற்றாண்டில் பெரிய அளவில் வளர துவங்கிய இந்த விளையாட்டை மேலும் பிரபலமடைய செய்வதுடன் கிரிக்கெட்டின் உண்மையான சாம்பியன் யார் என்பதை கண்டறிய ஐசிசி அறிமுகம் செய்த விளையாட்டு தொடரே கிரிக்கெட் உலககோப்பையாகும்.

IND-u-19

- Advertisement -

காலப்போக்கில் இந்த உலக கோப்பை தொடர்களை ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்த வேளையில் கிரிக்கெட்டின் வருங்காலத்தை சிறப்பான வகையில் கட்டமைக்கும் வண்ணம் அறிமுகப்படுத்தப்பட்ட தொடர் தான் அண்டர் 19 உலககோப்பையாகும். இந்த உலகக்கோப்பை பல உலகத்தரம் வாய்ந்த தரமான கிரிக்கெட் வீரர்களை முன்கூட்டியே உலகிற்கு எடுத்துக்காட்டக்கூடிய ஒரு உன்னதமான தொடராகும்.

அண்டர் 19 உலககோப்பை:
அப்படி ஒரு தொலைநோக்கு பார்வையுடன் உருவாக்கப்பட்ட இந்த 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை வரலாற்றில் முதல் முறையாக கடந்த 1998ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது முதல் ஒவ்வொரு 2 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெற்று வரும் இந்த உலக கோப்பையில் இதுவரை 13 தொடர்கள் நடைபெற்று முடிந்துள்ளன.

Under 19 World Cup

தற்போது 14வது முறையாக மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும் இந்த உலக கோப்பையில் லீக் மற்றும் நாக்-அவுட் சுற்றுகளில் அசத்திய இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய அணிகள் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறும் மாபெரும் பைனலில் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்த உள்ளன.

- Advertisement -

சரித்திர கேப்டன்கள்:
இந்த உலகக் கோப்பை வரலாற்றில் அதிக பட்சமாக இந்தியா 4 முறை சாம்பியன் பட்டம் வென்று வெற்றிகரமான அணியாக விளங்குகிறது. ஆஸ்திரேலியா 3 முறையும் பாகிஸ்தான் 2 முறையும் வென்றுள்ளன. தென்ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம் மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் தலா 1 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன.

1998 Under 19 U19

அந்த வகையில் வரலாற்றில் இந்தியாவுக்காக ஐசிசி அண்டர் 19 உலகக்கோப்பையை வென்ற இந்திய கேப்டன்கள் பற்றி பார்ப்போம்.
1. முகமத் கைப் (2000): கடந்த 2000ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற 3வது அண்டர் 19 உலக கோப்பையில் லீக் மற்றும் நாக்-அவுட் சுற்றுகளில் அசத்திய முகமது கைஃப் தலைமையிலான இந்திய அணி பின்னர் நடந்த இறுதிப் போட்டியில் இலங்கையை அதன் சொந்த மண்ணில் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சரித்திரம் படைத்தது. இதன் வாயிலாக இந்த உலக கோப்பையை வென்ற முதல் இந்திய கேப்டன் என்ற சாதனையையும் முகமது கைஃப் படைத்தார்.

- Advertisement -

அந்த தொடர் முழுவதும் இந்தியாவின் வெற்றியில் பங்காற்றிய யுவராஜ் சிங் தொடர் நாயகன் விருதை வென்று அசத்தினார். அந்த உலகக் கோப்பையில் முகமது கைஃப் மற்றும் யுவராஜ் சிங் என 2 தங்கமான வீரர்களை இந்தியா கண்டறிய அந்த வருடமே அவர்கள் இந்திய சீனியர் அணியில் விளையாடும் வாய்ப்பைப் பெற்றார்கள். அதன்பின் நாளடைவில் இந்த 2 வீரர்களும் எவ்வளவு பெரிய மேட்ச் வின்னர்களாக மாறி இந்தியாவின் பல வெற்றிகளில் பங்காற்றினார்கள் என்பது பலரும் அறிவார்கள் என்பதால் இங்கு பதிவிட தேவையில்லை.

kohli u19

2. விராட் கோலி (2008) : தற்போதைய இந்திய அணியின் முதுகெலும்பு வீரராக வலம் வரும் விராட் கோலி கடந்த 2008ஆம் ஆண்டு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடந்த அண்டர் 19 உலக கோப்பையை 2வது முறையாக இந்தியாவிற்கு வென்று கொடுத்தார். இப்போது போலவே அந்த உலக கோப்பையிலும் ஆக்ரோசமான கேப்டன்ஷிப் மற்றும் அதிரடியான பேட்டிங் வாயிலாக இந்தியாவை இறுதிப் போட்டிக்கு விராட்கோலி அழைத்துவந்தார்.

- Advertisement -

அதன் பின் நடந்த இறுதிப்போட்டியில் தென்ஆப்பிரிக்காவை 12 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இந்தியா 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. அந்த தொடரில் விராட் கோலி மட்டுமல்லாது நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜாவும் இந்தியாவின் வெற்றியில் பங்காற்றி பின்னர் நட்சத்திரமாக என்பது குறிப்பிடத்தக்கது.

1998 Under 19 U19

3. உன்முக்த் சந்த் (2012): ஆஸ்திரேலியாவில் நடந்த 2012 ஐசிசி அண்டர் 19 உலக கோப்பையை அப்போதைய கேப்டனாக இருந்த உன்முக்த் சந்த் வென்று கொடுத்தார் என்றே கூற வேண்டும். ஏனெனில் அந்த உலகக் கோப்பையில் ஆரம்பம் முதல் அசத்தி வந்த இந்தியா இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் எதிர் கொண்டது.

அந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்த 226 ரன்கள் இலக்கை துரத்திய இந்தியாவிற்கு கேப்டன் உன்முக்த் சந்த் அபார சதம் அடித்து 111* ரன்கள் குவித்து இந்தியா 3வது முறையாக கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார். இருப்பினும் அதற்கு பிந்தைய காலங்களில் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு மறுக்கப் பட்டதால் தற்போது அவர் வெளிநாட்டுக்கு குடிபெயர்ந்து விட்டார்.

shaw 1

4. பிரிதிவி ஷா (2018): நியூஸிலாந்து மண்ணில் கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த இந்த உலக கோப்பையில் லீக் சுற்றில் அசத்திய இந்தியா நாக்-அவுட் சுற்றில் அபாரமாக செயல்பட்டு இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இந்த உலகக் கோப்பையில் ஜாம்பவான் ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளராக செயல்பட கேப்டன் பிரிதிவி ஷா இந்தியாவை வழிநடத்தி கோப்பையை வென்று காட்டினார்.

இந்த உலக கோப்பையில் இருந்து பிரித்திவி ஷா, சுப்மன் கில், கமலேஷ் நாகர்கோட்டி, சிவம் மாவி உள்ளிட்ட பல இளம் நட்சத்திரங்கள் உருவாகி தற்போது ஐபிஎல் தொடரில் பிரகாசமாக விளையாடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement