ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் அசத்தலான விலைக்கு போன அண்டர்-19 வீரர்களின் லிஸ்ட் இதோ

IND- u19
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடருக்கான வீரர்கள் ஏலம் பெங்களூருவில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. மொத்தம் 590 வீரர்கள் பங்கேற்ற இந்த ஏலத்தில் முதல் நாளன்று 74 தரமான வீரர்கள் வாங்கப்பட்டார்கள். அதில் அதிகபட்சமாக இளம் விக்கெட் கீப்பர் பேட்டர் இஷான் கிஷன் 15.25 கோடிகளுக்கு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதன் வாயிலாக ஐபிஎல் நேரடி ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட 2வது இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

Auction

- Advertisement -

அத்துடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 14 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட தீபக் சஹர் ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றார். அதேசமயம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு 12.25 கோடிகளுக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் வாங்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் விரைவில் அந்த அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அண்டர் 19 வீரர்கள்:
இந்த ஏலம் துவங்குவதற்கு சரியாக ஒரு வாரம் முன்பாக மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற ஐசிசி அண்டர்-19 உலக கோப்பையை 5வது முறையாக இந்தியா வென்று சாதனை படைத்தது. எனவே இந்த உலக கோப்பையில் மிகச் சிறப்பாக செயல்பட்ட இளம் இந்திய வீரர்களை வாங்க அனைத்து அணிகளும் போட்டி போடும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில் ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் இந்திய அண்டர்-19 வீரர்கள் அடங்கிய 17 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலில் 2வது நாள் ஏலத்துக்கு வந்தது. அதில் நல்ல விலைக்கு வாங்கப்பட்ட வீரர்கள் பற்றி இப்போது பார்ப்போம்.

U19 World Cup 2022

1. யாஷ் துள் : இந்தியாவுக்கு 5வது முறையாக அண்டர்-19 உலகக்கோப்பையை வென்று கொடுத்த டெல்லியைச் சேர்ந்த இளம் வீரர் மற்றும் கேப்டன் யாஷ் துள் ரூபாய் 50 லட்சத்துக்கு தனது சொந்த மாநிலமான டெல்லி கேப்பிடல்ஸ் அணியால் வாங்கப்பட்டார். இவரின் அடிப்படைகளை 20 லட்சமாகும்.

- Advertisement -

2. லலித் யாதவ் : இந்திய அணியில் ஆல் ரவுண்டராக விளையாடிய லலித் யாதவ் ரூபாய் 65 லட்சத்துக்கு டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் ஆனார்.

Yash Dhull

3. ரிபல் படேல்: இளம் வீரர் ரிபல் படேலை அவரின் அடிப்படை விலையான 20 லட்சத்துக்கு அட்டகாசமாக மீண்டும் டெல்லி கேப்பிடல்ஸ் அணி வாங்கியது.

- Advertisement -

4. திலக் வர்மா : இளம் ஆல்ரவுண்டர் திலக் வர்மாவை வாங்க டெல்லி மற்றும் மும்பை அணிகள் போட்டியிட இறுதியில் மும்பை இந்தியன்ஸ் 1.7 கோடிகள் என்ற பெரிய தொகைக்கு வாங்கியது.

IND- u19

5. மஹிபால் லோமரர்: இளம் வீரர் மஹிபால் லோமரரை கடும் போட்டி போட்டி வாங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்வாகம் ரூபாய் 95 லட்சத்துக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

- Advertisement -

6. அங்குல் ராய் : அங்குல் ராயை அவரின் அடிப்படை விலையான 20 லட்சத்துக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வாங்கி அசத்தியது.

7. தர்சன் நல்கண்டே : தர்சன் நல்கண்டேவை அவரின் அடிப்படை விலையான 20 லட்சத்துக்கு குஜராத் டைட்டன்ஸ் அணி வாங்கியுள்ளது.

Raj Bawa

8. ராஜ் பாவா : அண்டர்-19 உலக கோப்பை முழுவதும் ஆல்-ரவுண்டராக அசத்திய ராஜ் பாவா இறுதிப்போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்று அசத்தினார். இதன் காரணமாக எதிர்பார்க்கப்பட்டது போலவே இவர் 2 கோடி என்ற மிகப்பெரிய தொகைக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது.

9. ராஜ்வர்தன் ஹங்கேர்க்கர் : இந்திய அணியில் அசத்திய இளம் ஆல்ரவுண்டர் ராஜவர்தன் ஹங்கேர்க்கரை 1.5 என்ற பெரிய தொகைக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் போராடி வாங்கியது.

Under 19 World Cup

10. சஞ்சய் யாதவ் : இளம் ஆல் ரவுண்டர் சஞ்சய் யாதவை 50 லட்சத்துக்கு மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் வாங்கியுள்ளது.

11. யாஷ் தயாள் : இந்திய அணியில் பந்துவீச்சாளராக அசத்திய யாஷ் தயாள் 3.20 கோடிகள் என்ற மிகப்பெரிய தொகைக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி போட்டி போட்டு வாங்கியது. இதன் வாயிலாக இந்த ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் போன அண்டர்-19 இந்திய வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.

IND-u-19

12. சிமர்ஜித் சிங்: இளம் வீரர் சிமர்ஜித் சிங் அவரின் அடிப்படை விலையான 20 லட்சத்துக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்டுள்ளார்.

இருப்பினும் அந்த உலகக்கோப்பையில் கலக்கிய விக்கி ஒஸ்த்வால், வாசு வட்ஸ், ஆகாஷ் சிங் போன்ற ஒரு சில முக்கியமான அண்டர்-19 இந்திய வீரர்களை எந்த அணியும் வாங்க முன்வர வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement