- Advertisement -
இந்திய கிரிக்கெட்

IND vs AFG : பழைய பன்னீர்செல்வமாக திரும்பிய கிங் கோலி – சதமடித்து விமர்சனங்களை தூளாக்கி படைத்த சாதனைகளின் மெகா பட்டியல்

ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்று வரும் 2022 ஆசிய கோப்பையில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா லீக் சுற்றில் அடுத்தடுத்த வெற்றிகளை பதிவு செய்தாலும் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை இடம் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து பைனலுக்கு செல்லும் வாய்ப்பை நழுவ விட்டது. அதனால் வீட்டுக்கு திரும்புவதற்கு முன்பாக ஆப்கானிஸ்தானுக்கு எதிரான கடைசி போட்டியில் களமிறங்கியது. செப்டம்பர் 8ஆம் தேதியன்று துபாயில் நடைபெற்ற அப்போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வெடுத்த நிலையில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியா 20 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 212/2 ரன்கள் சேர்த்தது.

இந்த தொடரில் 35, 59*, 60, 0 என நல்ல பார்முக்கு திரும்பிய விராட் கோலி இம்முறை தொடக்க வீரராக களமிறங்கி அட்டகாசமாக செயல்பட்டு ஆப்கானிஸ்தான் பவுலர்களை வெளுத்து வாங்கி அரைசதம் அடித்து 119 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை வலுப்படுத்தினார். அவருடன் கம்பெனி கொடுத்த கேப்டன் கேஎல் ராகுல் 6 பவுண்டரி 2 சிக்சருடன் 62 (41) ரன்களில் ஆட்டமிழந்தாலும் மறுபுறம் அற்புதமாக செயல்பட்ட விராட் கோலி டி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக சதமடித்து 12 பவுண்டரி 6 சிக்சர்களுடன் 122* (61) ரன்களை வெளுத்து வாங்கினார்.

- Advertisement -

திரும்பிய கிங்:
கடைசியாக கடந்த 2019இல் சதமடித்திருந்த அவரை பெரிய பெயரை வைத்துக் கொண்டு எத்தனை நாட்கள் அணியில் நீடிக்க முடியும் என்று விமர்சித்து அத்தனை முன்னாள் வீரர்களும் கைதட்டி பாராட்டும் அளவுக்கு அற்புதமான பேட்டிங் செய்த அவர் சரியாக 1020 நாட்கள் கழித்து தன் மீதான விமர்சனங்களை அடித்து நொறுக்கி பழைய பன்னீர்செல்வமாக பழைய விராட் கோலியாக பார்முக்கு திரும்பினார்.

அதன்பின் 213 என்ற கடினமான இலக்கை துரத்திய ஆப்கானிஸ்தானுக்கு நஜிபுல்லா ஜாட்ரான் மட்டும் கடைசி வரை அவுட்டாகாமல் 4 பவுண்டரி 2 சிக்சருடன் 64* (59 ரன்கள் எடுத்து போராடினாலும் இதர வீரர்கள் கைகொடுக்க தவறியதால் 20 ஓவர்களில் அந்த அணி 111/8 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனால் 101 ரன்கள் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றி பெற்ற இந்தியா இத்தொடரை ஆறுதல் வெற்றியுடன் நிறைவு செய்தது. இந்த வெற்றிக்கு சதமடித்து விமர்சனங்களை நொறுக்கி முக்கிய பங்காற்றிய விராட் கோலி ஆட்டநாயகன் விருதை வென்றார். அத்துடன் இப்போட்டியில் அவர் படைத்த சாதனைகளை பற்றி பார்ப்போம்:

- Advertisement -

1. டி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக சதமடித்த விராட் கோலி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்த இந்திய வீரர் என்ற ரோகித் ஷர்மாவின் சாதனையை தகர்த்து புதிய சாதனை படைத்தார். அந்த பட்டியல்:
1. விராட் கோலி : 122*
2. ரோஹித் சர்மா : 118
3. சூரியகுமார் யாதவ் : 117

2. இந்த சதத்தையும் சேர்த்து 71 சதங்களை அடித்துள்ள அவர் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த 2வது பேட்ஸ்மேன் என்ற உலக சாதனையை ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் உடன் பகிர்ந்துகொண்டார். முதலிடத்தில் சச்சின் 100 சதங்களுடன் உள்ளார்.

- Advertisement -

3. அதைவிட சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 71 சதங்கள் அடித்த பேட்ஸ்மேன் என்ற உலக சாதனையை அவர் படைத்தார். அந்த பட்டியல்:
1. விராட் கோலி : 522 இன்னிங்ஸ்*
2. சச்சின் டெண்டுல்கர் : 523 இன்னிங்ஸ்
3. ரிக்கி பாண்டிங் : 652 இன்னிங்ஸ்

4. மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் 24000 ரன்களை எடுத்த 7வது பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்ற அவர் 24000 ரன்களை அதிவேகமாக அடித்த பேட்ஸ்மேன் என்ற உலக சாதனையை படைத்துள்ளார். அந்தப் பட்டியல் (இன்னிங்ஸ்):
1. விராட் கோலி : 522*
2. சச்சின் டெண்டுல்கர் : 543
3. ரிக்கி பாண்டிங் : 565
4. ஜேக் காலிஸ் : 573
5. குமார் சங்கக்காரா : 590
6. ராகுல் ட்ராவிட் : 596
7. மகிளா ஜெயவர்த்தனே : 668

- Advertisement -

5. அத்துடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 3500 ரன்களையும் அதிக ரன்களை குவித்த 2வது பேட்ஸ்மேன் (3584*) என்ற 2 பெருமைகளை பெற்ற அவர் அதிவேகமாக 3500 ரன்களை குவித்த பேட்ஸ்மேன் என்ற உலக சாதனை படைத்துள்ளார்.

6. மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக முறை 50+ ரன்கள் அடித்த வீரர் என்ற உலக சாதனை படைத்தார். அந்த பட்டியல்:
1. விராட் கோலி : 33*
2. ரோகித் சர்மா : 32
3. பாபர் அசாம் : 27

7. ராகுலுடன் 119 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அவர் ஆசிய கோப்பையில் அதிக முறை 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த வீரர் (6 முறை) என்ற சாதனையையும் படைத்தார். 2வது இடத்தில் சச்சின்(5 முறை) உள்ளார்.

8. மேலும் ஆசிய கோப்பையில் 1000 ரன்களை கடந்த அவர் ஆசிய கோப்பை வரலாற்றில் அதிவேகமாக 1000 ரன்களைக் குவித்த பேட்ஸ்மேன் என்ற வரலாற்றையும் படைத்தார்.

9. மேலும் ஆசிய கோப்பையில் அதிக ரன்கள் அடித்த இந்திய பேட்ஸ்மேன் என்ற சாதனையையும் படைத்தார். அந்த பட்டியல்:
1. விராட் கோலி : 1042*
2. ரோகித் சர்மா : 1016
3. சச்சின் டெண்டுல்கர் : 971

10. அத்துடன் இப்போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற அவர் ஆசிய கோப்பையில் அதிக ஆட்ட நாயகன் விருதுகளை வென்ற வீரர் என்ற சாதனை படைத்தார். மேலும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ஆட்டநாயகன் விருதுகளை வென்ற வீரர் என்ற உலக சாதனையை முகமது நபியுடன் (12) பகிர்ந்து கொண்டார்.

11. மேலும் 3 வகையான கிரிக்கெட்டிலும் சதமடித்த 4வது இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றவர் 20 ஓவர் மற்றும் 50 ஓவர் என 2 வகையான ஆசிய கோப்பைகளிலும் சதமடித்த ஒரே வீரர் என்ற சாதனை படைத்துள்ளார்.

12. அதுபோக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக வயதில் சதமடித்த இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

- Advertisement -
Published by