இங்கிலாந்து தொடரில் ஏகப்பட்ட சாதனைகளை முறியடிக்க காத்திருக்கும் விராட் கோலி – லிஸ்ட் இதோ

kohli 2

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆனது வரும் 4ஆம் தேதி முதல் துவங்க இருக்கிறது. ஏற்கனவே கடந்த முறை இங்கிலாந்து சென்ற இந்திய அணி 1-4 என்ற கணக்கில் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து தற்போது இம்முறை அதற்கு பதிலடி தரும் விதமாக இந்த டெஸ்ட் தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி இருக்கிறது. இந்நிலையில் இந்த தொடரின் போது இந்திய அணி கேப்டன் விராத் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் ஏகப்பட்ட சாதனைகளை முறியடிக்க காத்திருக்கிறார்.

kohli 1

அதன்படி தற்போது 92 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 27 சதங்கள் மற்றும் 25 அரைச் சதங்களுடன் 7547 ரன்களை குவித்துள்ளார். மேலும் அவர் 453 ரன்களை குவிக்க பட்சத்தில் 8000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனை படைப்பார். இதன் மூலம் ஜஸ்டின் லாங்கர், இயான் பெல், ஆதர்டன் ஆகியோரை பின்னுக்குத் தள்ள உள்ளார்.

- Advertisement -

மேலும் இங்கிலாந்து அணிக்கெதிராக இன்னும் 211 ரன்கள் குவிக்கும் பட்சத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 2000 வரை அடித்த வீரர் என்ற பெருமையை பெறுவார். இதற்கு முன்னர் இந்திய அணி சார்பாக டிராவிட் 1950 ரன்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த தொடரின் 10 இன்னிங்ஸ்களில் மூன்று அரை சதம் அடித்தால் டிராவிட், சச்சின், சுனில் கவாஸ்கர், லக்ஷ்மணன் ஆகியோரது சாதனையையும் சமன் செய்ய வாய்ப்பு உள்ளது.

kohli 1

அதே போன்று இன்னும் ஒரு சதம் அடிக்கும் பட்சத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்டீவ் ஸ்மித்தை பின்னுக்குத்தள்ளி தற்போது உள்ள வீரர்களில் அதிக சதம் அடித்த வீரர் என்ற பெருமையையும் படைப்பார். மேலும் இரண்டு சதங்கள் அடித்தால் மைக்கேல் கிளார்க், அம்லா ஆகியோரை பின்னுக்குத் தள்ளுவார்.

- Advertisement -

kohli rahane

அதேபோன்று கேப்டனாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 36 வெற்றிகளைப் பெற்றுள்ள கோலி மேலும் ஒரு போட்டியில் வெற்றி பெறுவதன் மூலம் கிளைவ் லாயிடின் சாதனையை முறியடிப்பார் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி டெஸ்ட் தொடரை கைப்பற்றினால் டிராவிட்டுக்கு பிறகு இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை கைப்பற்றிய கேப்டன் என்ற பெருமையையும் கோலி படைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement