விடைபெற்ற இந்தியாவின் ஆல் – டைம் கிரேட் கேப்டன் : 2007 – 2021 வரை மொத்த கோப்பைகளின் லிஸ்ட் இதோ

Trophies Won By MS Dhoni World
- Advertisement -

ஐபிஎல் தொடருக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருந்த வேளையில் முதல் போட்டித் துவங்குவதற்கு ஒருநாள் மட்டுமே மீதம் இருந்த நிலையில் நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக நட்சத்திர வீரர் எம்எஸ் தோனி நேற்று திடீரென அறிவித்தார். தற்போது 40 வயதை கடந்துவிட்ட அவர் சமீப காலங்களாக பெரிய அளவில் ரன்கள் குவிக்க தடுமாறி வந்த நிலையில் சென்னை அணியின் வருங்காலத்தை கருத்தில் கொண்டு காலம் காலமாக வழிநடத்தி வந்த கேப்டன் பொறுப்பை மற்றொரு நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜாவிடம் ஒப்படைத்துள்ளார்.

MS Dhoni Jadeja

- Advertisement -

இதை அடுத்து இந்த வருட ஐபிஎல் தொடரில் ஒரு சாதாரண வீரராக ஜடேஜாவின் தலைமையில் அவர் விளையாட உள்ளார். அவரின் இந்த திடீர் அறிவிப்பு சென்னை அணி ரசிகர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம். ஏனெனில் கடந்த 2008-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடங்கப்பட்டது முதல் கடந்த வருடம் வரை சென்னை பங்கேற்ற அனைத்து வருடங்களிலும் கேப்டன்ஷிப் செய்த அவர் அந்த அணிக்காக 4 கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார்.

மேலும் அவர் தலைமையில் 12 சீசன்ங்களில் பங்கேற்ற சென்னை அதில் 11 முறை பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று 9 முறை இறுதிப் போட்டிகளில் விளையாடி 4 கோப்பைகளை முத்தமிட்டு சாதனை படைத்தது. அதுபோக 2010, 2014 ஆகிய ஆண்டுகளில் 2 சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பைகளையும் சென்னை அணிக்காக அவர் பெற்றுக் கொடுத்துள்ளார். மொத்தம் 4 கோப்பைகளை வென்று கொடுத்துள்ள அவர் ஐபிஎல் வரலாற்றில் 2-வது வெற்றிகரமான கேப்டன் என்ற சாதனை படைத்துள்ளார்.

Dhoni-1

அதைவிட 204 போட்டிகளில் கேப்டன்ஷிப் செய்து அதில் 121 வெற்றிகளை 59.60% என்ற வெற்றி சராசரி விகிதத்தில் குவித்துள்ள அவர் போட்டிகள் மற்றும் வெற்றி சராசரியின் அடிப்படையில் 5 கோப்பைகளை வென்ற ரோகித் சர்மாவை காட்டிலும் ஐபிஎல் வரலாற்றில் வெற்றிகரமான கேப்டனாக சாதனை படைத்துள்ளார். கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் முறையாக இந்தியாவின் கேப்டனாக பொறுப்பேற்ற தோனி 2017 வரை 3 வகையான இந்திய கிரிக்கெட்டுக்கும் கேப்டன்ஷிப் செய்து இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு வெற்றிகரமான கேப்டனாக சாதனை படைத்துள்ளார். அதற்கு முன்பு உள்ளூர் கிரிக்கெட்டில் கூட கேப்டன்சிப் செய்த அனுபவமில்லாத அவர் 2007-ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை, 2011-ஆம் ஆண்டு உலக கோப்பை 2013-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி என 3 வகையான உலகக் கோப்பைகளையும் இந்தியாவிற்கு வென்று கொடுத்த ஒரே கேப்டன் என்ற சரித்திர சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ராஞ்சி நகரில் பிறந்து வளர்ந்து ரயில்வே துறையில் ஒரு டிக்கெட் கலெக்டராக பணியாற்றி கிரிக்கெட் மீது இருந்த காதலால் அரசு பணியை தூக்கி எறிந்த அவர் நாட்டுக்காக கிரிக்கெட் விளையாடினார். முதலில் ஒரு சாதாரண விக்கெட் கீப்பராக காலடி வைத்த அவர் நாளடைவில் கேப்டனாக உருவாகி இந்தியாவிற்காக பல கோப்பைகளை வென்று “ட்ராபி கலெக்டர்” என்ற பெயரையும் பெருமையையும் பெற்றார். கடந்த 1983-ஆம் ஆண்டு இந்தியாவிற்காக முதல் முறையாக ஜாம்பவான் கபில்தேவ் உலக கோப்பையை வென்று கொடுத்த பின் முகமது அசாருதீன், சௌரவ் கங்குலி, ராகுல் டிராவிட் என பல தரமான கேப்டன்கள் இந்தியாவை வழிநடத்திய போதிலும் உலக கோப்பையை வெல்ல முடியாமல் இந்தியா தவித்தது.

Captain

ஆனால் கேப்டனாக பொறுப்பேற்றபின் அடுத்தடுத்த உலக கோப்பைகளை வென்று கொடுத்த எம்எஸ் தோனி கபில்தேவ், சௌரவ் கங்குலி என அதற்கு முந்தைய இந்திய கேப்டன்களையும் மிஞ்சி இந்தியாவின் மாபெரும் ஆல் – டைம் கிரேட் கேப்டனாக வரலாற்றில் தனது பெயரை பொன் எழுத்துக்களால் பொறித்துள்ளார் என்றால் மிகையாகாது. மேலும் 90களில் விஸ்வரூபம் எடுத்த ஆஸ்திரேலியா அடுத்தடுத்த கோப்பைகளை வென்று அசத்தியது.

- Advertisement -

குறிப்பாக அந்த அணியின் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் அடுத்தடுத்த உலக கோப்பைகளை அசால்ட்டாக வென்று ஆஸ்திரேலியாவுக்கு பெருமை சேர்த்தார். அந்த காலகட்டங்களில் அவரைப் பார்த்து ஏங்கிக் கொண்டிருந்த இந்திய ரசிகர்களுக்கு வரமாய் கிடைத்த தோனி இந்திய ரசிகர்களின் நீண்ட நாள் உலக கோப்பை கனவையும் தாகத்தைத் தணித்தார் என்றே கூறலாம். மொத்தத்தில் ஆஸ்திரேலியாவிற்கு ஒரு ரிக்கி பாண்டிங் என்றால் இந்தியாவிற்கு ஒரு எம்எஸ் தோனி என்பதே நிதர்சனமான உண்மையாகும்.

Ponting-1

கோப்பைகளின் பட்டியல்:
2007 முதல் 2021 வரை தோனி வென்ற முக்கிய கோப்பைகளின் மொத்த பட்டியலைப் பற்றி பார்ப்போம்.

- Advertisement -

1. 2007-ஆம் ஆண்டு முதல் முறையாக கேப்டனாக பொறுப்பேற்ற எம்எஸ் தோனி தலைமையிலான இந்தியா தென்னாப்பிரிக்காவில் நடந்த வரலாற்றின் முதல் டி20 உலகக் கோப்பையை யாருமே எதிர்பாராத வண்ணம் வென்று சாதனை படைத்தது. அதே வருடம் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடந்த உலகக்கோப்பையில் ராகுல் டிராவிட் தலைமையில் வங்கதேசத்திடம் அடி வாங்கி லீக் சுற்றோடு நடையை கட்டிய இந்தியாவிற்கு அது மாபெரும் மருந்தாக அமைந்தது.

T20 wc

2. 2008-ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த ஆஸ்திரேலியா – இந்தியா – இலங்கை ஆகிய 3 அணிகள் மோதிய முத்தரப்பு தொடரில் இளம் வீரர்களையும் சச்சின் போன்ற மூத்த வீரர்களையும் கச்சிதமாக வழிநடத்திய தோனி அபாரமாக கேப்டன்ஷிப் செய்தார். அதன் காரணமாக ஆஸ்திரேலியா மற்றும் இலங்கையை தோற்கடித்த இந்தியா வரலாற்றிலேயே முதல் முறையாக ஆஸ்திரேலிவை அதன் சொந்த மண்ணில் சாய்த்து ஒரு முத்தரப்பு தொடரை வென்று சாதனை படைத்தது.

3. அனில் கும்ப்ளே ஓய்வுக்குப்பின் டெஸ்ட் போட்டிகளுக்கும் கேப்டன்ஷிப் செய்த எம்எஸ் தோனி சச்சின், ராகுல் டிராவிட், விவிஎஸ் லக்ஷ்மன் என மூத்த வீரர்கள் அனைவரையும் சிறப்பான வழியில் வழிநடத்தி 2010-ஆம் ஆண்டு வரலாற்றிலேயே முதல் முறையாக இந்தியாவை உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக தரம் உயர்த்தினார். அதற்காக அந்த வருடம் வழங்கப்பட்ட டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையையும் எம்எஸ் தோனி வென்றார்.

Trophies Won By MS Dhoni

4. 2010 எம்எஸ் தோனி கேப்டன்ஷிப் பயணத்தில் ஒரு பொன்னான வருடம் எனக் கூறலாம். ஏனெனில் அந்த வருடம் நடந்த ஐபிஎல் தொடரில் முதல் முறையாக சென்னை அணிக்கு கோப்பை வென்று கொடுத்த அவர் அதன்பின் நடந்த ஆசிய கோப்பையையும் முதல் முறையாக வென்று காட்டினார். மேலும் அதே வருடத்தின் இறுதியில் நடந்த சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பையையும் முதல் முறையாக வென்று ஒரே வருடத்தில் ஹாட்ரிக் கோப்பைகளை வென்றார்.

5. 2011-ஆம் ஆண்டு சொந்த மண்ணில் நடந்த உலகக் கோப்பையை வென்ற எம்எஸ் தோனி தலைமையிலான இந்திய அணி 28 ஆண்டுகள் கழித்து உலக கோப்பையை முத்தமிட்டு சாதனை படைத்தது. அந்த வருடம் இந்தியாவிற்கு உலக கோப்பையை கேப்டனாக வென்று கொடுத்த எம்எஸ் தோனி மீண்டும் உலகின் நம்பர் டெஸ்ட் அணியாக இந்தியாவை வழிநடத்தியதால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை மீண்டும் வென்றார். அதே வருடத்தின் ஐபிஎல் கோப்பையை வென்ற அவர் 2010 போலவே மீண்டும் 2011-ஆம் ஆண்டிலும் 3 கோப்பைகளை வென்று அசத்தினார்.

worldcup

6. சச்சின், ராகுல் டிராவிட் என இந்தியாவின் மூத்த வீரர்கள் வயது காரணமாக ஓய்வு பெறத் துவங்கிய வேலையில் ரோகித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா என இளம் வீரர்களை வைத்து இங்கிலாந்தில் நடந்த 2013 சாம்பியன்ஸ் ட்ராபியில் இந்தியாவை வழி நடத்திய எம்எஸ் தோனி சாம்பியன்ஸ் ட்ராபியை வென்று காட்டினார். அந்த தொடரில் இளம் வீரர்களை வைத்து கோப்பையை வென்ற அவரின் கேப்டன்ஷிப் பலராலும் பாராட்டப்பட்டது.

7. 2013-ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் இந்தியா, இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 3 அணிகள் மோதிய முத்தரப்பு தொடர் நடைபெற்றது. அதில் லீக் சுற்றில் அபாரமாக செயல்பட்ட இந்தியா இறுதிப் போட்டியில் இலங்கைக்கு எதிராக மிகக் குறைந்த இலக்கைத் துரத்தும் போது தோல்வியின் பிடியில் சிக்கியது. ஆனால் அந்த நேரத்தில் களமிறங்கிய எம்எஸ் தோனி கடைசி ஓவரில் 2 சிக்ஸர்கள் அடித்து அபார பினிஷிங் செய்து அந்த முத்தரப்பு தொடரை இந்தியாவிற்கு தனி ஒருவனாக கோப்பையை வென்று கொடுத்தார் என்றே கூறலாம். அவரின் பினிஷிங் திறமைக்கு அந்தப் போட்டி ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

Dhoni

8. அதன்பின் 2014-ஆம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரில் தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் 2-வது முறையாக சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பையை முத்தமிட்டது.

9. 2016-ஆம் ஆண்டு வங்கதேசத்தில் நடந்த ஆசிய கோப்பையையும் எம்எஸ் தோனி தலைமையிலான அணி வென்று அசத்தியது.

Dhoni-3

10. 2018-ஆம் ஆண்டு அங்கிள்ஸ் ஆர்மி என கிண்டலடித்த நிலையில் வயதான வீரர்களை வைத்துக்கொண்டே சாதித்துக் காட்டிய எம்எஸ் தோனி 3-வது முறையாக சென்னைக்கு ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்தார். அதன்பின் 2021-ஆம் ஆண்டு கடைசியாக கேப்டன்ஷிப் செய்த ஐபிஎல் தொடரிலும் அபாரமாக செயல்பட்ட அவர் 4-வது முறையாக கோப்பையை வென்று தனது கடைசி போட்டியில் கோப்பையுடன் விடை பெற்றுள்ளார்.

Advertisement