கடைசிவரை வெற்றி கொடுக்காத போராட்டம் ! ரன் மழை பொழிந்த பட்லர் படைத்த மொத்த சாதனைகளின் பட்டியல்

Jos Buttler Orange Cap
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரின் மாபெரும் இறுதிப்போட்டி மே 29-ஆம் தேதியான நேற்று இரவு 8 மணிக்கு 1 லட்சம் ரசிகர்கள் கூடியிருந்த அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் தைரியமாக பந்து வீசுவதாக அறிவித்தாலும் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சுமாராக செயல்பட்டு வெறும் 130/9 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 1 பவுண்டரி 2 சிக்சருடன் 22 (16) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க அடுத்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 14 (11) தேவதூத் படிக்கல் 2 (10) என முக்கிய பேட்ஸ்மேன்கள் பொறுப்பின்றி சொற்ப ரன்களில் நடையை கட்டினர்.

GTvsRR

- Advertisement -

அதனால் 79/3 என தடுமாறிய அந்த அணியை காப்பாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட நம்பிக்கை நட்சத்திரம் ஜோஸ் பட்லர் 5 பவுண்டரிகளுடன் 39 (35) ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார். அதனால் மேலும் பின்னடைவை சந்தித்த அந்த அணிக்கு சிம்ரோன் ஹெட்மையர் 11 (12) ரியான் பராக் 15 (15) என கடைசியில் வந்த வீரர்களும் பெரிய ரன்களை எடுக்காமல் கைவிட்டனர். அந்த அளவுக்கு பந்துவீச்சில் அட்டகாசமாக செயல்பட்ட குஜராத் சார்பில் அதிகபட்சமாக கேப்டன் ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

ராஜஸ்தான் தோல்வி:
அதை தொடர்ந்து 131 என்ற சுலபமான இலக்கை துரத்திய குஜராத்துக்கு ரித்திமான் சாஹா 5 (7) ரன்களிலும் அடுத்து வந்த மேத்யூ வேட் 8 ரன்களிலும் அவுட்டானதால் 23/2 என அந்த அணி தடுமாறியது. இருப்பினும் அடுத்து களமிறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்டியா 3 பவுண்டரி 1 சிக்சருடன் 34 (30) ரன்கள் குவித்து மேலும் சரிய விடாமல் வெற்றி உறுதி செய்து ஆட்டமிழந்தார். இறுதியில் நங்கூரமாக நின்ற மற்றொரு தொடக்க வீரர் சுப்மன் கில் 45* (43) ரன்கள் எடுக்க கடைசி நேரத்தில் பட்டைய கிளப்பிய டேவிட் மில்லர் 3 பவுண்டரி 1 சிக்சருடன் 39* (19) ரன்கள் எடுத்து பினிஷிங் கொடுத்ததால் 18.1 ஓவரிலேயே 133/3 ரன்கள் எடுத்த குஜராத் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

அதனால் ஐபிஎல் 2022 தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்ற அந்த அணி கேப்டன்ஷிப் அனுபவமில்லாத ஹர்திக் பாண்டியா தலைமையில் முதல் வருடத்திலேயே கோப்பையை முத்தமிட்டு சரித்திரம் படைத்தது. இந்த வெற்றிக்கு 34 ரன்கள் 3 விக்கெட்டுகள் எடுத்த கேப்டன் ஹர்திக் பாண்டியா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். மறுபுறம் இந்த மிகப்பெரிய போட்டியில் பேட்டிங்கில் சொதப்பிய ராஜஸ்தான் 2008 க்குப் பின் 2-வது கோப்பையை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டது.

- Advertisement -

பரிதாப பட்லர்:
இத்தனைக்கும் இந்த வருடத்தின் முதல் போட்டியிலிருந்து அந்த அணிக்காக இங்கிலாந்தின் நம்பிக்கை நட்சத்திரம் ஜோஸ் பட்லர் ஒவ்வொரு போட்டியிலும் எதிரணிகளை சொல்லி அடித்து மெஷினாக ரன் மழை பொழிந்தார் என்றே கூறலாம். அதிலும் முதல் 7 போட்டிகளில் 3 சதங்களை அடித்த அவர் அடுத்த 7 போட்டிகளில் போட்டிகளில் தடுமாறினாலும் முக்கியமான நாக் அவுட் போட்டியில் 89, 106* ரன்கள் என மீண்டும் விஸ்வரூபம் எடுத்து அபார பேட்டிங் செய்தார். சொல்லப்போனால் அவரின் அதிரடி பேட்டிங் காரணமாகத்தான் லீக் சுற்றில் அசத்தி நாக் அவுட் போட்டிகளைத் தாண்டி இறுதிப் போட்டி வரை ராஜஸ்தான் வந்தது.

Jos Buttler vs RCB

இந்த இறுதிப் போட்டியிலும் 5 பவுண்டரியுடன் அதிகபட்சமாக 39 (35) ரன்கள் எடுத்த அவரின் போராட்டம் இறுதிவரை தோல்வியில் முடிந்ததால் நேற்றைய போட்டியில் அவுட்டான இன் கோபத்தில் ஹெல்மெட்டை தூக்கி எறிந்தார். ஏனெனில் இதர பேட்ஸ்மென்கள் சொதப்பியதால் ரன் மழை பொழிந்த அவரின் கைகள் கோப்பையை தொட முடியாமல் ஏமாற்றமடைந்தது. இருப்பினும் இந்த வருடத்தில் அவர் படைத்த சாதனைகளின் பட்டியல் பற்றி பார்ப்போம்:

- Advertisement -

1. முதலில் இந்த வருடம் பங்கேற்ற 17 போட்டிகளில் 4 சதங்கள் 4 அரைசதங்கள் உட்பட 863 ரன்களை 57.53 என்ற சூப்பரான சராசரியில் 149.75 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் தெறிக்கவிட்ட அவர் ராஜஸ்தான் தோல்வியடைந்த போதிலும் இந்த வருடத்தின் தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

2. மேலும் இந்த வருடம் 863 ரன்கள் குவித்த அவர் அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேன்களின் பட்டியலில் கடைசி வரை முதலிடம் பிடித்து அதற்கான ஆரஞ்சு தொப்பியை வென்று சாதனை படைத்தார். அந்த பட்டியல் இதோ:
1. ஜோஸ் பட்லர் : 863
2. கேஎல் ராகுல் : 616
3. குயின்டன் டீ காக் : 508

- Advertisement -

3. ஒரு கட்டத்தில் விராட் கோலியின் 973 ரன்கள் சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அவர் இறுதிவரை அதை தொட முடியவில்லை என்றாலும் டேவிட் வார்னரை முந்தி ஐபிஎல் வரலாற்றில் ஒரு சீசனில் அதிக ரன்கள் விளாசிய வெளிநாட்டு பேட்ஸ்மேன் மற்றும் 2-வது பேட்ஸ்மேன் என்ற சாதனை படைத்தார். அந்தப் பட்டியல் இதோ:
1. விராட் கோலி : 973 (2016)
2. ஜோஸ் பட்லர் : 863 (2022)*
3. டேவிட் வார்னர் : 848 (2016)
4. கேன் வில்லியம்சன் : 735 (2018)

Jos Buttler 116

4. மேலும் 89, 106*, 39 என நாக் அவுட் போட்டிகளில் அட்டகாசமாக பேட்டிங் செய்த அவர் ஐபிஎல் வரலாற்றில் பைனல் உட்பட ப்ளே ஆஃப் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன் என்ற புதிய சாதனை படைத்தார். அந்தப் பட்டியல் இதோ:
1. ஜோஸ் பட்லர் : 234 (2022)*
2. டேவிட் வார்னர் : 190 (2016)
3. ரஜத் படிடார் : 170 (2022)

5. அத்துடன் இந்த வருடம் அதிக சதங்கள் (4) அதிக ரசிகர்கள் (45) அதிக பவுண்டரிகள் (83) அடித்த பேட்ஸ்மேன் என்ற சாதனையையும் ஜோஸ் பட்லர் படைத்துள்ளார்.

buttler 1

6. மேலும் இந்த வருடத்தின் பவர்பிளே ஓவர்களில் அதிக ரன்கள் அடித்த பவர் பிளேயர் (374 ரன்கள்), கேம் சேஞ்சர் (1468 புள்ளிகள்) போன்ற பட்டியல்களிலும் முதல் இடத்தை பிடித்து அதற்கான விருதுகளை வென்றார்.

Advertisement