100 மைல்கல் டெஸ்ட் போட்டிகளை நெருங்கியும் தொடாமல் போன ஜாம்பவான்கள் – ஜாம்பவான் வீரர்களின் லிஸ்ட்

Test
- Advertisement -

இலங்கைக்கு எதிராக இந்தியா தனது சொந்த மண்ணில் பங்கேற்கும் 2 போட்டிகள் டெஸ்ட் தொடர் மொகாலியில் இன்று துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள ரோகித் சர்மா தலைமையில் இந்த போட்டி முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா தனது புதிய பயணத்தை துவங்கியுள்ளது.

Kohli 2

- Advertisement -

இன்று துவங்கிய இந்த போட்டியில் களமிறங்கிய இந்தியாவின் நட்சத்திர வீரர் மற்றும் முன்னாள் கேப்டன் விராட் கோலி தனது 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடி சாதனை படைத்தார். கடந்த 2011ஆம் ஆண்டு இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக காலடி வைத்த அவர் அதன்பின் தனது அபார திறமையால் படிப்படியாக உயர்ந்து முக்கிய வீரராக உருவெடுத்து இன்று இந்திய பேட்டிங் துறையில் முதுகெலும்பாக கருதப்படுகிறார்.

அதேபோல் 2014 – 2021 வரை கேப்டனாகவும் செயல்பட்ட அவர் பொறுப்பேற்ற போது 7வது இடத்தில் இருந்த இந்தியாவை தொடர்ந்து 5 ஆண்டுகள் உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக வலம் வர வைத்தார். குறிப்பாக ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் சரித்திர வெற்றிகளை பெற்றுக்கொடுத்த அவர் 40 வெற்றிகளுடன் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் வெற்றிகரமான இந்திய கேப்டன் என்ற பெயருடன் விடை பெற்றுள்ளார். இவ்வளவு சாதனைகளை செய்து இன்று 100வது மைல்கல் போட்டியில் விளையாடும் அவரை பிசிசிஐ கௌரவப்படுத்தியது.

Kohli-1

குறிப்பாக இந்தியாவின் ஜாம்பவான் மற்றும் தற்போதைய பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அவருக்கு சிறப்பு தொப்பியை பரிசளித்த கௌரவ படுத்தினார். இந்த போட்டியில் அனுஷ்கா சர்மா, சரோஜ் கோலி உள்ளிட்ட தனது மனைவி மற்றும் தாய்க்கு முன்னிலையில் விராட் கோலி தனது 100வது போட்டியில் விளையாடி வருகிறார்.

- Advertisement -

தவறவிட்ட ஜாம்பவான்கள்:
பொதுவாக தங்கள் நாட்டுக்காக ஒருநாள், டி20 போட்டிகளில் கூட எளிதாக விளையாடி விடலாம். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவது என்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல. ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுவது என்பதே அவ்வளவு கடினமாக இருக்கும் நிலையில் 100 போட்டிகளில் விளையாடுமெனில் மிகச் சிறப்பாக தொடர்ச்சியாக பல வருடங்கள் சிறப்பாக செயல்பட வேண்டும். அந்த வகையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி ஜாம்பவான்களாக பெயர் பெற்ற போதிலும் 100வது போட்டியை தவறவிட்ட சில முக்கிய வீரர்களை பற்றி பார்ப்போம்.

Azharuddin

1. முஹம்மது அசாருதீன் (99 போட்டிகள்) : இந்தியாவுக்காக 90 களில் முக்கிய கேப்டனாக வலம் வந்த முகமது அசாருதீன் 3 ஐசிசி உலக கோப்பைகளில் கேப்டன்ஷிப் செய்த ஒரே இந்திய கேப்டன் என்ற பெருமைக்கு உரியவர். கடந்த 1984இல் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான அவர் இந்தியாவிற்காக 99 போட்டிகளில் விளையாடி 6215 ரன்களை குவித்துள்ளார். குறிப்பாக தனது முதல் போட்டியில் சதமடித்த அவர் 99வது போட்டியில் சதமடித்து 100வது போட்டிக்கு மிக அருகே சென்ற போதிலும் அந்த மைல்கல்லை அவரால் தொட முடியவில்லை.

- Advertisement -

2. சர் கர்ட்லி அம்ப்ரோஸ் (98 போட்டிகள்) : 1988இல் அறிமுகமாகி உலக டாப் பேட்ஸ்மேன்களை மிரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் வேகப்பந்து வீச்சாளர் கர்ட்லி ஆம்ரோஸ் 90களில் அந்த அணியின் முக்கிய பந்து வீச்சாளராக வலம் வந்தார். மொத்தமாக 2000ஆம் ஆண்டு வரை 98 போட்டிகளில் விளையாடி 405 விக்கெட்டுகளை எடுத்த அவரால் 100ஆவது போட்டியை நெருங்கிய போதும் தொட முடியாமல் போனது.

Curtly Ambrose

3. ஆடம் கில்கிறிஸ்ட், ராட் மார்ஷ், நாசர் ஹுசைன் (98 போட்டிகள்) : 80களில் ஆஸ்திரேலியாவின் விக்கெட் கீப்பராக ஜாம்பவான் ராட் மார்ஷ் அசத்தினார் என்றால் 90 களின் இறுதியில் மற்றொரு ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட் அவரை விட ஒருபடி மேலே சென்று உலகின் மிகச் சிறந்த விக்கெட் கீப்பராக உருவெடுத்தார். இந்த இருவருமே ஆஸ்திரேலியாவுக்காக தலா 96 போட்டிகளில் விளையாடிய போதிலும் 100 போட்டிகளை எட்டிப்பிடிக்க முடியவில்லை. இவர்களைப் போலவே 90களின் இறுதியில் இங்கிலாந்தின் முக்கிய வீரராக உருவெடுத்த நாசர் ஹூசைன் காலப்போக்கில் இங்கிலாந்தின் கேப்டனாக பொறுப்பேற்று 96 போட்டிகளில் விளையாடிய போதிலும் 100 போட்டிகளுக்கு முன்பாகவே ஓய்வு பெற்றார்.

- Advertisement -

3. அர்ஜுனா ரணதுங்கா, அரவிந்தா டீ சில்வா, கேரி சோபர்ஸ், டேல் ஸ்டைன் : 90 களில் இலங்கையின் முக்கிய வீரர்களாக வலம் வந்த அர்ஜுனா ரணதுங்கா மற்றும் அரவிந்த டி சில்வா ஆகிய இருவருமே 93 போட்டிகளில் விளையாடிய போதிலும் 100 போட்டிகளை நெருங்க முடியவில்லை. 1996ஆம் ஆண்டு இலங்கைக்கு முதல் முறையாக கேப்டன் அர்ஜுனா ரணதுங்கா உலகக் கோப்பையை பெற்றுக் கொடுத்தார். அந்த உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் அரவிந்த டீ சில்வா சதம் அடித்து ஆட்டநாயகன் விருது பெற்றார். டெஸ்ட் போட்டிகளிலும் இவர்கள் இலங்கைக்கு பல வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்தார்கள்.

Dhoni

இவர்களை போல வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் கேரி சோபர்ஸ் மற்றும் தென் ஆப்பிரிக்காவின் அதிரடி மின்னல் வேக மிரட்டல் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டைன் ஆகியோரும் ஜாம்பவான்களாக உருவெடுத்த காரணத்தால் 100 போட்டிகளை நெருங்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இறுதியில் அவர்கள் 93 போட்டிகளில் மட்டுமே விளையாடினார்கள்.

4. எம்எஸ் தோனி (90 போட்டிகள்) : இந்தியா கண்ட மகத்தான விக்கெட் கீப்பர் மற்றும் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி கடந்த 2005க்கு பின் இந்திய டெஸ்ட் அணியில் முதன்மையான விக்கெட் கீப்பராக விளையாடி வந்தார். காலப்போக்கில் கேப்டனாக இந்தியாவிற்கு 3 விதமான உலக கோப்பைகளை வாங்கி கொடுத்து இந்தியாவின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாகவும் வலம் வர வைத்தார். இதனால் 100 போட்டிகளுக்கு மேல் நிச்சயமாக விளையாடுவார் என எதிர்பார்த்த வேளையில் கடந்த 2014ஆம் ஆண்டு 90 போட்டிகளில் மட்டுமே விளையாடி இருந்த நிலையில் தனது 33 வயதிலேயே யாரும் எதிர்பாராத வண்ணம் திடீரென ஓய்வு பெற்றார்.

Warner

இப்போது உள்ள வீரர்களில் இந்தியாவின் புஜாரா 95 போட்டிகள், இலங்கையின் ஏஞ்சலோ மேத்யூஸ் 93 போட்டிகள், ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் 92 போட்டிகள், பாகிஸ்தானின் அசார் அலி 92 போட்டிகள் ஆகியோர் 100 போட்டிகளை நெருங்க கூடியவர்களாக காணப்படுகிறார்கள்.

Advertisement