முதல் நாள் ஆட்டம் 58 ஓவர்களிலேயே முடிவடைய காரணம் என்ன தெரியுமா ? – விவரம் இதோ

Ind
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான கடைசி மற்றும் 3வது டெஸ்ட் போட்டி தற்போது ராஞ்சி மைதானத்தில் இன்று துவங்கியது. இந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றி தோல்வி தொடரை பாதிக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

Rahane

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 224 ரன்கள் குவித்தது. ரோஹித் சர்மா 117 ரன்களுடனும், ரஹானே 83 ரன்ங்களுடனும் களத்தில் உள்ளனர். நாளை இரண்டாவது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

இந்நிலையில் இன்று முதல் நாள் ஆட்டம் 58 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் முடிவுக்கு வந்தது. ஏனெனில் மைதானத்தில் போதிய அளவு வெளிச்சம் இல்லாத காரணத்தினாலும் மீண்டும் சூரியன் வெளிவராது என்ற காரணத்தினாலும் முதல் நாள் போட்டி முடிவுக்கு வந்தது. மேலும் மாலை நேரத்தில் ராஞ்சி நகரில் மழை வந்ததும் குறிப்பிடத்தக்கது.

Rohith

மழையின் காரணமாக இரவு நேரத்தில் மைதானம் ஈரமாக இருந்தாலும் காலையில் மைதான கண்காணிப்பாளர்கள் மூலம் சரி செய்யப்படும் என்றும் நாளைய போட்டியில் இந்திய அணி விரைவில் ரன் குவித்து தென்னாப்பிரிக்க அணியை பேட்டிங்க்கு அழைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement