டி20 கிரிக்கெட்டில் அதிவேக சதமடித்து சாதனை படைத்த இங்கிலாந்து வீரர் – என்னா அடி ? வியந்து போன இங்கிலாந்து டீம்

Livingstone
- Advertisement -

பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி நேற்று நாட்டிங்காம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர்கள் ரிஸ்வான் மற்றும் பாபர் அசாம் ஆகியோரது அபார பேட்டிங்கினால் முதல் விக்கெட்டுக்கு 150 ரன்கள் சேர்த்தது. பின்னர் அடுத்து வந்தவர்கள் அனைவரும் அதிரடியாக ரன்களை குவிக்க 20 ஓவர்களின் முடிவில் 232 ரன்கள் என்ற பிரம்மாண்ட ரன் குவிப்பை வழங்கியது.

rizwan

- Advertisement -

பாகிஸ்தான் அணி சார்பாக பாபர் அசாம் 85 ரன்களும், ரிஸ்வான் 63 ரன்கள் குவித்தனர். அதன்பின்னர் 233 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய தொடங்கிய இங்கிலாந்து அணி துவக்க வீரர் டேவிட் மலானை ஒரு ரன்னில் இழந்தது. அதன் பின்னர் ஜேசன் ராய், பேர்ஸ்டோ, மொயீன் அலி ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தும் வெளியேற இங்கிலாந்து அணி எளிதாக தோற்கும் என்ற நிலை உருவானது.

ஆனால் அப்போது 5 ஆவது வீரராக களமிறங்கிய 27 வயதான இங்கிலாந்து அணியின் இளம் வீரரான லியாம் லிவிங்ஸ்டன் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தான் சந்தித்த பந்துகளை எல்லாம் பவுண்டரியும், சிக்சர்களுமாக விளாசித் தள்ளிய அவர் 42 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் 9 சிக்சர்களுடன் டி20 கிரிக்கெட்டில் தனது முதலாவது சதத்தை கடந்தார்.

livingstone 1

இந்த அதிரடி ஆட்டத்தின் மூலம் இங்கிலாந்து வீரர்களில் அதிவேக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை தற்போது லியாம் லிவிங்ஸ்டன் படைத்துள்ளார். ஒருபக்கம் இவர் சிறப்பாக விளையாடி வர மறுபக்கம் விக்கெட்டுகள் விழுந்து கொண்டே வந்தன. இறுதியில் இவரும் 43 பந்துகளில் 103 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க இங்கிலாந்து அணியின் வெற்றி வாய்ப்பு பறிபோனது.

livingstone 2

இறுதியில் 19.2 ஓவர்களில் 201 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 31 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியிடம் இங்கிலாந்து அணி தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement