இங்கிலாந்தின் சரவெடியை நிறுத்திய குலதீப்புக்கு, கோலி புகழாரம்..! அந்த ஒரு ஓவர்..! – விவரம் உள்ளே

- Advertisement -

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, இந்த தொடரின் முதல் டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது, இதில் இந்திய அணியின் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறித்து கோலி புகழாரம் சூட்டியுள்ளார்.
virat kohli
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் டி20 போட்டி நேற்று (ஜூன் 3) மாஞ்சிஸ்டரில் உள்ள ஓல்ட் ட்ராட்போர்ட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் பீல்டிங்கை தேர்வு செய்தது. பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஜோஸ் பட்லர் மற்றும் ராய் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர்.

துவக்கத்தில் சிறப்பாக விளையாடிய இங்கிலாந்து அணியின் ராய் ஆட்டமிழந்த பின்னர் இங்கிலாந்து அணி விக்கெட்டுகள் தொடர்ந்து விழ தொடங்கியது. குறிப்பாக இந்திய அணியின் குல்தீப் யாதவ் இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்களை கதி கலங்க வைத்தார்.இங்கிலாந்து அணியின் முக்கிய ஆட்டக்காரர்களான ஹேல், இயான் மோர்கன், ஜோன்னி பிரிஸ்டோ, ஜோ ரூட் , ஜோஸ் பட்லர் போன்றவர்களின் விக்கெட்டுகளை கை பற்றினார்.

இந்த போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய குல்தீப் யாதவை குறித்து இந்திய அணியின் வெற்றிக்கு பிறகு கோலி பேசியதாவது” ரன் விகிதத்தில் பறந்து கொண்டிருந்த இங்கிலாந்தை தரையிறக்கியது குல்தீப்பின் அந்த ஒரு ஓவர் தான். அவர் மணிக்கை சூழல் பந்து வீச்சாளர் என்பதால் அவர் எந்த ஒரு பிட்ச்சிலும் அபாயகரமாக இருப்பார். அவர் வீசும் போது தவறான பந்தை கணிப்பதும் புரிந்து கொள்வதும் மிக கடினம். அவர் தொடர்ந்து இது போன்று சிறப்பாக பந்து வீசுவார் என்று நம்புகிறேன் ” என்று கூறியிருந்தார்.

- Advertisement -
Advertisement