விராட் கோலியிடம் நிறைய கத்துக்கிறோம்.. மதிப்பு குறையாது.. அபார சாதனை படைத்த முகமது ரிஸ்வான் பேட்டி

- Advertisement -

அயர்லாந்து மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இந்த தொடரின் முதல் போட்டியில் வென்ற அயர்லாந்து ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அந்த நிலையில் இந்தத் தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 2வது போட்டி மே 12ஆம் தேதி டப்லின் நகரில் நடைபெற்றது.

அந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய அயர்லாந்து 20 ஓவரில் போராடி 193/7 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்கு ஆண்டி பால்பரின் 16, கேப்டன் பால் ஸ்டர்லிங் 11 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். இருப்பினும் மிடில் ஆர்டரில் அசத்திய லார்கன் டுக்கர் 51 (34) ஹேரி டெக்டர் 32 (28) குட்டீஸ் கேம்பர் 22 (13) டிலானி 28* (10) ரன்கள் எடுத்தனர்.

- Advertisement -

பாகிஸ்தான் வெற்றி:
பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக சாகின் அப்ரிடி 3, அப்பாஸ் அப்ரிடி 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத்தொடர்ந்து 194 ரன்களை துரத்திய பாகிஸ்தானுக்கு சாய்ம் ஆயுப் 6 ரன்களில் அவுட்டாகி சென்ற நிலையில் மறுபுறம் தடுமாறிய கேப்டன் பாபர் அசாம் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அதனால் 13/2 என ஆரம்பத்திலேயே தடுமாறிய பாகிஸ்தானுக்கு அடுத்ததாக முகமது ரிஸ்வான் மற்றும் பஃகார் ஜமான் ஆகியோர் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினர்.

அந்த வகையில் 15 ஓவர்கள் வரை நிலைத்து நின்று 140 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடியில் பஃகார் ஜமான் 6 பவுண்டரி 6 சிக்சருடன் 78 (40) ரன்கள் எடுத்தார். அவருடன் முகமது ரிஸ்வான் 75* (46) அசாம் கான் 30* (10) ரன்கள் எடுத்ததால் 16.5 ஓவரிலேயே 195/3 ரன்கள் எடுத்த பாகிஸ்தான் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அதனால் 1 – 1* (3) என்ற கணக்கில் இத்தொடரையும் சமன் செய்து பாகிஸ்தான் நிம்மதி பெருமூச்சு விட்டது.

- Advertisement -

இந்த வெற்றிக்கு 75 ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றிய முகமது ரிஸ்வான் ஆட்டநாயகன் விருது வென்றார். அத்துடன் இந்தப் போட்டியை சேர்த்து சர்வதேச டி20 கிரிக்கெட்டில் விராட் கோலிக்கு பின் 50க்கும் மேற்பட்ட பேட்டிங் சராசரியை கொண்ட வீரர் என்ற உலக சாதனையை ரிஸ்வான் படைத்தார். அது பற்றி போட்டியின் முடிவில் கேட்ட போது விராட் கோலி மீது தமக்கு நிறைய மரியாதை இருப்பதாகவும் அவரிடமிருந்து கற்றுக் கொள்வதாகவும் ரிஸ்வான் தெரிவித்தார்.

இதையும் படிங்க: இப்போதான் எல்லாமே சரியா நடக்குது.. டெல்லி அணிக்கெதிரான வெற்றிக்கு பிறகு – டூபிளெஸ்ஸிஸ் பேட்டி

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நான் எப்போதும் நம்பர்களை பார்ப்பதில்லை. ஒருவேளை நீங்கள் சராசரியை பார்த்தால் நீங்கள் ஒரு சராசரியான வீரர். போட்டியின் சூழ்நிலை மற்றும் கால சூழ்நிலைகளை பார்த்து விளையாடுவதே சிறப்பாகும். விராட் கோலி சிறந்த வீரர். நாங்கள் அவரிடம் இருந்து நிறைய கற்றுள்ளோம். அவரை நான் மதிக்கிறேன்” என்று கூறினார்.

Advertisement