இந்திய அணியின் புதிய துவக்க வீரராக களமிறங்க இவருக்கு நேரம் வந்துவிட்டது – லஷ்மண் பேட்டி

இந்திய அணி தற்போது பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி முடித்துள்ளது. பங்களாதேஷ் அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் முதலிடத்தில் இருந்து வருகிறது.

Cup

இந்த டெஸ்ட் தொடருக்கு அடுத்து தற்போது மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இந்த இரு தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் தேர்வு குழு தலைவர் எம் எஸ் கே பிரசாத் தலைமையில் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

இந்த தொடருக்கான அணியில் இடம் பிடித்திருந்த தவான் காயம் காரணமாக சிகிச்சையை தொடர அணியில் இருந்து விலகி உள்ளதால் டி20 தொடருக்கான அணியில் சஞ்சு சாம்சன் இடம்பிடித்துள்ளார் இந்நிலையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரரான லட்சுமணன் இந்திய அணியின் புதிய துவக்க வீரர் குறித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார். டி20 போட்டிகளில் தவான் காயம் அடைந்துள்ளதை அடுத்து தற்போது புதிய தொடரை இந்திய அணி எவ்வாறு இருக்கப் போகிறது என்பதை இந்த தொடரில் நாம் பார்க்க போகிறோம்.

Rahul

என்னை பொருத்தவரை ராகுலை டி20 போட்டிகளுக்கு துவக்க வீரராக களம் இருக்கலாம் ஏனெனில் அவர் தற்போது நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ளார். மேலும் அவருடைய கிரிக்கெட்டின் ஷாட்டுகள் மற்றும் அவருடைய அதிரடி ஆகியவை அவருக்கு நிச்சயம் கை கொடுக்கும் என்னை பொருத்தவரை தற்போது உள்ள இந்திய வீரர்களில் ராகுல் துவக்க வீரராக களம் இறங்கினால் அவர் நீண்ட நாட்கள் துவக்க வீரராக நீடிக்க வாய்ப்புள்ளதாகவும் நான் நினைக்கிறேன். எனவே இந்த தொடரிலேயே நான் அவரையே துவக்க வீரராக எதிர்பார்க்கிறேன் என்று லக்ஷ்மண் கூறினார்.

- Advertisement -
Advertisement