என் கிரிக்கெட் வாழ்வில் நிறைவேறாத ஆசை இதுமட்டும் தான் பிறந்த நாளன்று மனம் திறந்த – லட்சுமணன்

Laxman-1

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான விவிஎஸ் லட்சுமணன் இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராக பார்க்கப்படுகிறார். அதிலும் குறிப்பாக சச்சின், கங்குலி, டிராவிட் மற்றும் லட்சுமணன் ஆகியோர் இருந்த இந்திய டெஸ்ட் அணி இந்திய அணியின் பொற்காலமாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் லட்சுமணன் தனது 45வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். லட்சுமணன் என்றாலே நம் நினைவுக்கு வருவது அவர் அடித்த 281 ரன்கள் தான். வரலாற்று சிறப்புமிக்க போட்டியில் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகபட்ச ரன்களை இந்திய அணிக்காக குவித்தார். அதன் பிறகு அந்த சாதனையை சேவாக் முறியடித்தது தனிக்கதை. இருப்பினும் பாலோஆன் பெற்ற ஒரு போட்டியில் தனி நபராக நின்று அவர் இந்த ஸ்கோரை அடித்து இந்திய அணிக்கு வெற்றி தேடித் தந்தது குறிப்பிடத்தக்கது.

இதுவரை 134 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 86 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ள அவர் 10000 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். மேலும் 23 சதங்களையும் சர்வதேச கிரிக்கெட்டில் அடித்துள்ளார் ஓய்வுக்குப் பிறகும் இந்திய அணியின் வர்ணனையாளர் ஆகவும் மேலும் ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்திலும் தொடர்ந்து கிரிக்கெட் பணிகளை ஆற்றிவருகிறார்.

Laxman

லட்சுமணன் வாழ்வில் நிறைவேறாத ஆசை ஒன்று உள்ளது. அது யாதெனில் நூற்றுக்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டியில் விளையாடிய அவரால் ஒரே ஒரு உலக கோப்பை போட்டியில் விளையாட முடியவில்லை தன் வாழ்நாளில் அதுமட்டும்தான் நிறைவேறாத தனது ஆசை என்று அவர் பழைய பேட்டி ஒன்றில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.