நான் விளையாடுன டைம்ல இவர் தான் இந்திய அணிக்கு மேட்ச் வின்னர் – லக்ஷ்மண் பேட்டி

Laxman-1
- Advertisement -

சச்சின், டிராவிட் ,கங்குலி மற்றும் லட்சுமணன் என இந்திய அணி சிறப்பாக இருந்த காலத்தில் ஆஸ்திரேலிய அணி கிரிக்கெட்டில் தங்களது ஆதிக்கத்தை ஆழமாக பதித்து இருந்தது. ஆஸ்திரேலிய அணியை எந்த அணியும் வீழ்த்த முடியாத நிலையிலும் கங்குலி தலைமையிலான இந்திய அணி மட்டும்தான் ஆஸ்திரேலிய அணியை ஆட்டிப் பார்த்த ஒரு அணி ஆகும்.

Laxman

- Advertisement -

மேலும் டிராவிட், சச்சின், ஷேவாக், கங்குலி மற்றும் லட்சுமணன் என ஒவ்வொருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் மேட்ச் வின்னர் தான். அப்படி இருந்த காலத்தில் தான் ஆடிய காலத்திலேயே மிகச்சிறந்த மேட்ச் வின்னர் இவர்தான் என்று லட்சுமணன் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது :

என்னை பொறுத்தவரை இந்திய அணியில் அணில் கும்ப்ளே தான் நான் ஆடிய காலத்தில் மிகப்பெரிய மேட்ச் வின்னர் என்று கூறுவேன். ஏனெனில் அவர் எதிரணி வீரர்களை தனது அசாத்தியமான பந்துவீச்சு திறமையின் மூலம் விக்கட்டுகளை வீழ்த்துவார். நான் விளையாடிய போது என்னை அவர் ஒரு முறை வீழ்த்தி உள்ளார்.

kumbley

அவரின் பந்துவீச்சு பேட்ஸ்மேனுக்கு ஏற்றார்போல் போட்டியின் ஆரம்பத்தில் இருந்தாலும் அதன் பின்னர் எவ்வாறு அவர்களை வீழ்த்த வேண்டும் என்பதை கணித்து அதன்படி பந்து வீசுவதில் கும்ளே வல்லவர் இந்திய அணிக்காக பல போட்டிகளில் பல முக்கியமான சூழ்நிலைகளில் விக்கெட்டுகளை அள்ளி எங்கள் அணிக்கு பெரிய மேட்ச் வின்னராக இருந்தது லக்ஷ்மன் கும்ளே தான் என்று லட்சுமணன் புகழாரம் சூட்டியுள்ளார்.

Advertisement