நான் செய்த தவறை ரோஹித் டெஸ்ட் போட்டிகளில் செய்யமாட்டார் என்று நம்புகிறேன் – லட்சுமணன் பேட்டி

Laxman
- Advertisement -

இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரை முடித்து அடுத்து அந்த அணிக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி வரும் அக்டோபர் 2ஆம் தேதி துவங்க உள்ளது.

Rohith-1

- Advertisement -

இந்த தொடரில் இந்திய அணியின் புதிய டெஸ்ட் ஓப்பனராக ரோகித் சர்மா களமிறங்க உள்ளார். தற்போது நடந்த பயிற்சி ஆட்டத்தில் ரோகித் சர்மா டக் அவுட்டாகி அதிர்ச்சி அளிக்க அவர் குறித்து தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரரான விவிஎஸ் லக்ஷ்மன் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : நான் செய்த தவறை நிச்சயம் ரோகித்சர்மா செய்யமாட்டார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

என்னுடைய டெஸ்ட் கிரிக்கெட் வாழ்வில் நான் ஆரம்பத்தில் 4 போட்டிகளில் விளையாடிய உடன் உடனே என்னை டெஸ்ட் போட்டியில் ஓபனிங் செய்ய அழைத்தார்கள். நானும் ஓபனிங் செய்ய களம் இறங்கினே.ன் ஆனால் என்னால் மிடில் ஆர்டரில் ஆடும் அளவிற்கு ஓபனிங்கில் பிரகாசிக்க முடியவில்லை. ஏனெனில் போட்டியின் துவக்க நாளில் ஸ்விங் மற்றும் வேகம் அதிகமாக இருக்கும் அதை என்னால் கணிக்க முடியாது. ஆனால் போகப்போக மிடில் ஆர்டரில் என்னால் சிறப்பாக ஆட முடியும். அப்படியே இந்திய அணியில் வெற்றிகரமாக மிடில் ஆர்டரில் பிரகாசித்தேன்.

Rohith

நான் செய்த அந்தத் தவறால் என்னால் ஓபனிங் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட முடியவில்லை. ஆனால் ரோகித் சர்மா பல ஆண்டுகளாக துவக்க வீரராக களமிறங்கி உள்ளார். எனவே அவருக்கு ஓப்பனிங்கில் எப்படி விளையாட வேண்டியது என்ற அனைத்து அனுபவமும் அவரிடம் உள்ளது. எனவே டெஸ்ட் போட்டிகளில் நான் செய்த தவறை அவர் செய்ய மாட்டார். துவக்க வீரராக அவர் சிறப்பாக விளையாடி டெஸ்ட் போட்டியில் தனது திறமையை நிரூபிப்பார் என்று லட்சுமணன் கூறினார்.

Advertisement