வார்னே பந்தில் ஆட்டமிழந்ததும் விரக்தியில் ஓய்வறையில் சச்சின் செய்த செயல் – பழைய நினைவை பகிர்ந்த லட்சுமணன்

Laxman-1
- Advertisement -

கிரிக்கெட் உலக ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் உடன் நீண்டகாலம் விளையாடிய வீரர்களில் இந்திய அணியின் டெஸ்ட் வீரரான லக்ஷ்மணனும் ஒருவர். டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக மிகமுக்கியமான ஒரு வீரராக விளங்குகிய அவருக்கும் சச்சினுக்கும் இடையே பல ஆண்டு நாடு இன்றளவும் நீடித்துவருகிறது. மேலும் சச்சின் கங்குலி டிராவிட் ஆகியோருடன் இவரும் இந்திய அணியின் ஒரு முக்கிய தூணாக பார்க்கப்படுகிறார்.

Laxman

- Advertisement -

இந்திய அணியின் வரலாற்று சிறப்பு மிக்க டெஸ்ட் போட்டிகளில் இவர்கள் நால்வருக்கும் சிறப்பான பங்கு உள்ளது. இந்நிலையில் தற்போது கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாமல் உள்ளதால் தான் விளையாடிய காலத்தில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து விவிஎஸ் லக்ஷ்மன் நினைவுகூர்ந்து வருகின்றனர்.

அதன்படி சச்சின் உடனான நினைவுகள் குறித்து சில சம்பவங்களை குறிப்பிட்டுள்ள லட்சுமன் கூறுகையில் : இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான போட்டி குறித்து தற்போது ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். அதன்படி எப்போதும் இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான போட்டி சச்சின் வார்னே போட்டி என்று அழைக்கப்படும்.

அதாவது சச்சினுக்கும் வார்னேவுக்கும் இடையே நடக்கின்ற போட்டியாகவே ரசிகர்கள் மத்தியில் பார்க்கப்படும். சச்சின் தனது பேட்டிங்கால் வார்னேவை அடக்குவாரா ? அல்லது வார்னே தனது பவுலிங் சச்சினை அடக்குவாரா ? என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலாக இருப்பார்கள். இந்நிலையில் 1998 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி நடைபெற்றது.

- Advertisement -

அந்த போட்டியில் வார்னே பந்துவீச்சை திறமையாக எதிர்கொள்ள சச்சின் உள்ளூர் பவுலர்களை வைத்து கடுமையாக பயிற்சியை மேற்கொண்டார். ஆனால் அந்த போட்டியின்போது வார்னரின் பந்துவீச்சில் ஆட்டமிழந்த சச்சின் டெண்டுல்கர் ஓய்வு அறைக்கு சென்று கதவை பூட்டிக்கொண்டு வெளியே வரவில்லை என்று லட்சமனன் கூறியுள்ளார். மேலும் இது குறித்து விரிவாக அவர் கூறுகையில் : சென்னை போட்டிக்காக டெண்டுல்கர் நல்ல நிலைமையில் தயாராக இருந்தார்.

dravid 2

முதல் இன்னிங்ஸில் அவர் 4 ரன்களில் ஆட்டமிழந்தது நேராக ஓய்வு அறைக்கு சென்ற அவர் கதவை பூட்டிக் கொண்டு உள்ளேயே இருந்தார். பிறகு ஒரு மணி நேரத்திற்கு கழித்து வெளியே வந்த பார்க்கும்போது அவர் கண்கள் சிவப்பாக இருந்தது. அவுட்டான விரக்தியில் அவர் மிகவும் கவலை அடைந்து இருப்பார் என்று நினைத்தேன் என்று லக்ஷ்மனன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement