இந்திய அணியை பங்களாதேஷ் அணி தோற்கடிக்கும் – வி.வி.எஸ் லட்சுமணன் அதிரடி கருத்து

பங்களாதேஷ் அணி தற்போது இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணியுடன் 3 டி20 போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தற்போது தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருகிறார்கள்.

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை 3 ஆம் தேதி டெல்லி மைதானத்தில் நடைபெறுகிறது. அதற்கடுத்து 7 ஆம் தேதி ராஜ்கோட்டிலும், 11ம் தேதி நாக்பூரில் அடுத்தடுத்த போட்டிகள் நடைபெறுகின்றன. இந்நிலையில் தனியார் சேனல் ஒன்றுக்கு இந்தியாவின் முன்னாள் வீரரான லட்சுமணன் இந்த தொடர் குறித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது :

இந்திய அணியிடம் வலிமையான பேட்டிங் வரிசை இருந்தாலும் கூட தற்போது உள்ள பங்களாதேஷ் அணியால் இந்திய அணியில் அணி சொந்த மண்ணில் விழ்த்த முடியும். அதற்கான மிகப்பெரிய வாய்ப்பு தற்போது கிடைத்துள்ளது. அதன்படி இந்திய அணிக்கு குறிப்பாக முஸ்தபிசுர் ரஹ்மான் கடுமையான சவாலை அளிப்பார். மேலும் தற்போதுள்ள இந்தியனின் சுழற்பந்து வீச்சை விட வங்கதேச அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்படுகிறார்கள் என்று நான் நினைக்கிறேன்.

Mustafizur

ஏனெனில் நடு வரிசையில் இந்திய அணி பலவீனமான அணியாக இருப்பதாகவே நான் கருதுகிறேன் ஒருவேளை பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சு அவர்களுக்கு கை கொடுத்தால் நிச்சயம் இந்திய அணியை பங்களாதேஷ் அணி ஒரு போட்டியிலாவது வீழ்த்தும். என்னை பொருத்தவரை இந்திய அணி இந்த தொடரில் 2 – 1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்ற வாய்ப்பு உள்ளது. எனவே அவர்கள் நிச்சயம் ஒரு போட்டியிலாவது ஜெயிப்பார்கள் என்பது என்னுடைய கருத்து என்று லட்சுமணன் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -