ரோஹித் சர்மா தொடர்ந்து ஐ.பி.எல் தொடரில் வெற்றிகரமான கேப்டனாக திகழ இதுவே காரணம் – லக்ஷ்மண் பேட்டி

Laxman
- Advertisement -

ஐபிஎல் தொடர் கடந்த 2008ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்று முறையும் மும்பை இந்தியன்ஸ் அணி 4 முறையும் கோப்பையை கைப்பற்றியுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 2013-ஆம் ஆண்டு ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார் .அப்போதில் இருந்து தற்போது வரை நான்கு முறை கோப்பையை கைப்பற்றி கொடுத்துள்ளார்.

- Advertisement -

இப்படி மிகச்சிறந்த கேப்டனாக திகழ்ந்து வருகிறார் ரோகித் சர்மா . இந்நிலையில் அப்படி ஒரு மிகச்சிறந்த கேப்டனாக இருக்க ரோகித்சர்மா செய்தது என்ன என்று தெரிவித்துள்ளார் விவிஎஸ் லட்சுமணன். இதுகுறித்து அவர் கூறுகையில்…

2007 ஆம் ஆண்டு டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடிய போது அவரிடம் தலைமைப் பண்பு இருந்தது. முதல் முறை ஐபிஎல் தொடரில் விளையாடும் போது டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடி விட்டு வந்திருந்தார். மிகவும் இளம் வீரராக இருந்தார். முதல் தொடரில் அவர் ஒரு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆக களமிறங்கினார் .அந்த தொடர் முழுவதும் அவரிடம் மிகச் சிறப்பான ஆட்டம் இருந்தது.

MI

ஒவ்வொரு போட்டியிலும் அவர் வெற்றி பெறும்போதும் அவரது தன்னம்பிக்கையை அதிகரிக்கும். இளம் வீரர்களுக்கு ஆலோசனை வழங்குவது, தனது கருத்தினை மிகத் தெளிவாக சொல்வது என்ற என அனைத்திலும் மிகச் சிறந்து விளங்கினார் ரோஹித். ஆனால் இவற்றையெல்லாம் விட நெருக்கடி நேரத்தில் சரியாக செயல்படுகிறார் என்பது தான் முக்கியமானது.

- Advertisement -

ஒவ்வொரு முறையும் பேட்டியின் போது அந்த நெருக்கடியை வைத்து தன்னை மெருகேற்றிக் கொள்கிறார் ரோகித் சர்மா, அதனால்தான் ஐபிஎல் தொடரின் மிகச்சிறந்த கேப்டனாக இருக்கிறார் அவர் என்று கூறியுள்ளார் விவிஎஸ் லக்ஷ்மன்.

லக்ஷ்மனிண் இந்த பீடி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் சமீபத்தில் இந்திய வீரரும், சி.எஸ்.கே அணியின் துணைக்கேப்டனுமான ரெய்னாவும் தோனிக்கு பிறகு அவருடைய கேப்டன்சி பண்புகள் அனைத்தும் ரோஹித்திடம் இருப்பதாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement