டி20 மட்டுமல்ல ஒருநாள் தொடரிலும் இதுதான் நடக்கும் – வி.வி.எஸ் லஷ்மணன் கணிப்பு

Laxman-1
- Advertisement -

இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற 5 டி20 போட்டிகளிலும் அட்டகாசமாக வெற்றி பெற்ற இந்திய அணி வெளிநாட்டு மண்ணில் மகத்தான சாதனை படைத்தது .

Thakur 3

- Advertisement -

இந்நிலையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை புதன்கிழமை 5 ஆம் தேதி நியூசிலாந்து ஹாமில்டன் மைதானத்தில் துவங்க உள்ளது. இது குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது கணிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லட்சுமனன் பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது :

நியூசிலாந்து அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர்கள் ட்ரென்ட் போல்ட், மேட் ஹென்றி , லாக்கி பெர்குசன் ஆகியோர் இல்லை. இது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும். இதனால்தான் டி20 தொடரில் நியூசிலாந்து அணி தோற்றது. இந்திய அணி இந்த தொடரில் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Bumrah-2

இந்த டி20 தொடரை போலவே ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி எளிதாக வெல்ல வாய்ப்புகள் உள்ளது. மேலும் ஒருநாள் தொடரில் மூன்று போட்டிகளையும் வெற்றி பெற்று ஒயிட்வாஷ் செய்யும் என டி வி எஸ் லட்சுமணன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement