இளம் வீரர்களை இப்படியா நடத்துவது..! பிசிசிஐ நிர்வாகத்தை கிழித்து தொங்க விட்ட முன்னாள் ஜாம்பவான்..!

KLrahul
- Advertisement -

இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. ஆனால் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் அதே 2-1 கணக்கில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. மூன்றாவது ஒரு நாள் போட்டியில் கே எல் ராகுலுக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டதை குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் வி வி எஸ் லக்ஷ்மணன் தனது அதிருப்தியான கருத்தை தெரிவித்துள்ளார்.
rahulkl
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் கே எல் ராகுல் அதிரடியாக விளையாடி 54 பந்துகளில் 101 ரன்களை குவித்தார். ஆனால் இரண்டாவது போட்டியில் 6 ரன்களுக்கும் மூன்றாவது 19 ரன்களுக்கும் ஆட்டமிழந்தார். இருப்பினும் இவருக்கு இங்கிலாந்து அணியுடனான ஒரு நாள் போட்டியில் வாய்ப்பளிக்கப்பட்டது.

முதல் ஒரு நாள் போட்டியில் 9 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்த கே எல் ராகுல் இரண்டாவது ஒரு நாள் போட்டியில் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். மேலும், முதல் ஒரு நாள் போட்டியில் வெற்றியடைந்த இந்திய அணி, இரண்டாவது போட்டியில் தோல்வியடைந்தது இதனால் மூன்றாவது போட்டியில் வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்று நிலையில் இருந்த இந்திய அணியில் கே எல் ராகுலுக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டிருந்தார். ஆனால் அவரும் எதிர்பார்த்த அளவிற்கு விளையாடவில்லை.

- Advertisement -

இந்நிலையில் கே எல் ராகுலுக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டது குறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரர் வி வி எஸ் லக்ஷ்மணன் ” காயம் இல்லாமல் வேறு எந்த காரணத்திற்காகவாவது ராகுல் நீக்கப்பட்டிருந்தால் அது வருந்ததக்க விடயம் தான். ஏனெனில் ராகுலுக்கு இவ்வாறு நடப்பது இது முதன்முறையல்ல. ஒரு போட்டியில் சரியாக ஆடவில்லை என்பதற்காக அணியிலிருந்து நீக்குவது சரியல்ல.
Laxman
ட்ரெண்ட் ப்ரிட்ஜில் இந்திய அணி வென்ற போது அவர் சிறப்பாக தான் விளையாடினார். சிறப்பாக விளையாடும் ஒரு வீரரை நீங்கள் இப்படி தான் அணுகுவீர்களா. ஒரு வீரர் சிறப்பாக விளையாடுகிறார் என்றால் அவரை சிறப்பாக ஆடவைக்க வேண்டும். இளம் வீரர்களை இப்படி நடத்தக் கூடாது என்று நான் நினைக்கிறேன் ” என்று மிகவும் காட்டமாக தனது கருத்தை கூறியுள்ளார்.

Advertisement