4-ஆவது டெஸ்ட் போட்டியில் மைதானத்தின் தன்மை இப்படித்தான் இருக்கும் – பி.சி.சி.ஐ கொடுத்த ஸ்டேட்மென்ட்

Broad
- Advertisement -

இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு இந்தியா தகுதி பேற இத்தொடரை வென்றே ஆக வேண்டும். இந்நிலையில் எஞ்சியுள்ள 4ஆவது டெஸ்ட் போட்டியில் ஒன்று வெல்ல வேண்டும் அல்லது டிரா செய்ய வேண்டும்.ஒருவேளை இங்கிலாந்து ஜெயித்தால் தொடர் 2-2 என்ற கணக்கில் முடியும். இந்தியா தன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் வாய்ப்பையும் இழக்க நேரிடும்.

cup

நடந்து முடிந்த 3ஆவது டெஸ்ட் போட்டி வெறும் 2 நாளிலேயே நடந்து முடிந்தது.
இங்கிலாந்து அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது. இதன் பின்னர் ஆடுகளத்தின் தரம் குறித்து இங்கிலாந்து வீரர்களும், சில இந்திய முன்னாள் வீரர்களும் தங்களது அதிருப்தியை தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் இந்தியா 4ஆவது போட்டியை வெல்ல அல்லது டிரா செய்யும் வகையிலேயே பிட்ச் அமைக்கும் என கேள்வி எழுந்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4ஆவது டெஸ்ட் போட்டிக்கான பிட்ச் பேட்டிங்கிற்கும், பந்துவீச்சுக்கும் சமமான அளவில் ஒத்துழைக்கும் வகையிலேயே அமைத்திருக்கிறோம் என்று பிசிசிஐ உறுதி கூறியுள்ளது. மேலும் பதிலளித்த பிசிசிஐ 3ஆவது டெஸ்ட் போட்டியின் வெற்றி பந்தைப் பொறுத்தே அமைந்தது பிட்ச் பொறுத்து அல்ல. பிட்ச் நன்றாக தான் இருந்தது இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் தான் பந்தை சமாளிக்க முடியாமல் ஆட்டமிழந்தார்கள்.

இந்தியா அணி சற்று நன்றாக பந்தை கணித்து ஆடினார்கள் அதுவே அவர்கள் வெற்றி பெற காரணமாக இருந்தது என்றும் விளக்கம் அளித்துள்ளது. பிசிசிஐ அமைப்பின் உயர் அதிகாரி ஒருவர் விமர்சனங்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார் அதில் அவர் “ஒரே மைதானத்தில் இரு போட்டிகள் நடத்தப்படும்போது, ஒருபோட்டியின் முடிவை மட்டும் கணக்கில் வைத்து குறை கூற முடியாது கடைசி டெஸ்ட் போட்டியும் முடிந்தபின்னர் கருத்தும் மற்றும் விமர்சனங்களை எடுத்து வைப்பது முறையானதாக இருக்கும்.

- Advertisement -

அது மட்டுமில்லாமல் ஐசிசி நடுவர் ஸ்ரீநாத் அவருடைய அறிக்கைக்கும் பின்பு தான் ஐசிசியும் நடவடிக்கை இருக்கும். இப்போதுவரை இங்கிலாந்து அணி சார்பில் ஐசிசியிடம் ஆடுகளம் குறித்து எந்த புகாரும் போகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இதுபோன்ற ஆடுகளங்கள் சில நேரங்களில் இந்திய அணிக்கே சோதனைகள் ஏற்படுத்தும் இவை எல்லாம் பிசிசிஐக்கு நன்கு தெரியும்” என்று விளக்கமளித்தார்.

Rohith

பிசிசிஐ கூறியது போல பேட்டிங் மற்றும் வேகப்பந்துக்கு சாதகமாக பிட்ச் அமைக்கப்பட்டால் போட்டி மிக கடுமையாக அமையும் என்று வல்லுநர்கள் கணித்துள்ளனர்.இங்கிலாந்தில் மூன்று அதிரடி வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ள நிலையில் இந்தியா வெற்றி பெற கடுமையாக போறாட வேண்டி இருக்கும் என கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Advertisement