சச்சினின் 24 வருஷ கிரிக்கெட்டில் எனக்கு மிகவும் பிடித்த இன்னிங்ஸ் இதுதான் – மனம் திறந்த லாரா

Lara
- Advertisement -

கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக உலகெங்கிலும் தற்போது அனைத்து வகையான விளையாட்டுப் போட்டிகளும் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் விளையாட்டு வீரர்கள் அனைவரும் செய்வதறியாது வீட்டிற்குள் முடங்கி உள்ளனர். அனைத்து வகையான விளையாட்டு போட்டிகளும் நடைபெற அடுத்த சிலமாதங்களுக்கு வாய்ப்பில்லை.

sachin50

கொரோனா பாதிப்பினால் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் வீட்டில் முடங்கி உள்ளனர். மேலும் தொடர்ச்சியாக கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று வந்த அவர்கள் தற்போது ஓய்வு நேரத்தில் ரசிகர்களின் கேள்விக்கு சமூக வலைதளங்களின் மூலம் பதில் அளித்து வருகின்றனர். அதன்படி பலரும் பல விடயங்களை தெரிவித்து தெரிவித்துக் கொள்வதுடன், சுவாரசியமான நிகழ்வுகளையும் அவ்வப்போது ரசிகர்களுடன் பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்நிலையில் தற்போது மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் ஜாம்பவான் பிரையன் லாரா சச்சின் டெண்டுல்கரின் மிகச்சிறந்த இன்னிங்ஸ் எதுவென்று தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் தனது 16 வயதில் இந்திய கிரிக்கெட்டிற்கு அறிமுகமாகிய 24 ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாடி 100 சதங்கள் உடன் 34 ஆயிரம் ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது.

sachin
sachin

கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய ஜாம்பவனாகவும், கிரிக்கெட்டின் கடவுளாக பார்க்கப்படும் சச்சின் கிரிக்கெட் உலகில் ஏகப்பட்ட சாதனைகளை தன் வசம் வைத்துள்ளார். அவரின் இந்த 24 வருடங்களில் அவர் விளையாடிய பல இன்னிங்ஸ்களில் சிறப்பானவை. அதில் குறிப்பாக லாரா குறிப்பிட்டது :

- Advertisement -

2004ஆம் ஆண்டு சிட்னியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அவர் அடித்த 241 ரன்கள் தான் அவரது கேரியரிலேயே மிகக் கட்டுப்பாடான, ஒழுக்கமான சிறந்த இன்னிங்ஸ் என்று கூறியுள்ளார். ஏனெனில் வெளிநாட்டு மைதானம் அதன் சூழ்நிலை மற்றும் பெரிய எல்லைகள் கொண்ட மைதானங்களில் அவ்வளவு நேரம் களத்தில் நின்று அடிப்பது என்பது எளிதான காரியமல்ல.

மிகுந்த மன உறுதி இருந்தால் மட்டுமே இது போன்ற போட்டிகளில் ரன்களை குவிக்க முடியும் என்று லாரா குறிப்பிட்டுள்ளார். அந்த போட்டியில் சச்சின் டெண்டுல்கர் ஆட்டமிழக்காமல் 436 பந்துகளை சந்தித்து 241 ரன்கள் அடித்தார். அந்த போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுகளை இழந்து 705 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement