Worldcup : உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி இதனை நிச்சயம் செய்யும் – லாரா பேட்டி

வரும் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து

Lara
- Advertisement -

வரும் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தயாராக உள்ளன. இந்த தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன.

Worldcup

- Advertisement -

இந்நிலையில், இந்தியாவில் தற்போது ஐ.பி.எல் தொடர் நடைபெற்று முடிந்தது. இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க இங்கிலாந்து சென்றடைந்தது. கடந்த பல தொடர்களாக இந்திய அணி மிகச்சிறந்த பார்மில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உலகக்கோப்பை தொடரின் இந்தியா அணியின் வீரர்கள் இப்போதே தொடரை எதிர்கொள்ள தயாராகிவிட்டார்கள்.

இந்நிலையில் உலகக் கோப்பை இந்திய அணி குறித்து முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் வீரரான லாரா பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : இந்திய அணி பேட்டிங் மற்றும் பவுலிங் என இரு பிரிவிலும் சமபலத்துடன் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக பல தொடர்களாக இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைத்து அணிகளையும் உயர்த்தி வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்திய அணியின் செயல்பாடு மிகவும் அற்புதமாக உள்ளது.

india

எனவே தற்போது வரும் உலக கோப்பையில் இந்திய அணி நிச்சயம் உலக கோப்பையை கைப்பற்றும் என்பது என்னுடைய நம்பிக்கை அவ்வாறு இந்திய அணி கோப்பையை தவற விட்டால் அது ஆச்சரியமே ஏனெனில் அவ்வளவு பலமாக இந்த உலகக் கோப்பையை இந்திய அணியை எதிர்கொள்கிறது. எனவே நிச்சயம் இந்திய அணிக்கு கோப்பை வெல்ல அனைத்து வாய்ப்புகளும் உண்டு என்பதே என் கருத்து என்று கூறினார்.

Advertisement