அவர் மீது அழுத்தம் கொடுக்காதீர்கள். அவர் சாதிப்பார். இந்திய வீரர் மீது நம்பிக்கை பேட்டியளித்த – லாரா

Lara

தோனிக்கு பதிலாக இந்திய அணியின் அடுத்த விக்கெட் கீப்பராக இளம் வீரரான ரிஷப் பண்டை தேர்வு செய்து இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகளை அளித்து வருப் கிறது. இருப்பினும் அவர் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை இதுவரை சரியாக பயன்படுத்தவில்லை என்றே கூறவேண்டும்.

Pant

ஏனெனில் அவர் அறிமுகமான தொடரின்போது சிறப்பாக விளையாடி அதற்கடுத்து வந்த பல தொடர்பாக தற்போது சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். குறிப்பாக பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரில் இருந்து அவரது கீப்பிங் மற்றும் பேட்டிங் மிக மோசமாக அமைந்து வருகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியிலும் தற்போது கேட்சை விட்டது மட்டுமின்றி கடைசி 4 ஓவர்களில் களத்தில் இருந்தும் அதிரடியாக ரன் குவிக்க முடியாமல் திணறினார்.

இதனை கோலி போட்டி முடிந்து பேட்டியில் தெளிவாக கூறியிருந்தார். இந்நிலையில் ரிஷப் பண்ட் மீதான விமர்சனம் ஏற்கனவே இருந்த அளவை விட தற்போது அதிகரித்துள்ளது. இந்நிலையில் தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் லாரா பண்ட் குறித்து ஆதரவாக பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : இளம் வீரரான ரிஷப் பண்ட் இன்னும் முதிர்ச்சி அடையவில்லை அவர் முதிர்ச்சி அடைய இன்னும் சில காலம் தேவைப்படும். அதனால் அவருக்கு முழுமையான அனுமதி அளித்து அவரது மன அழுத்தத்தை குறைக்க வேண்டும்.

pant 1

அவ்வாறு அவர் மீதுள்ள அழுத்தத்தை குறைத்தால் அவர் நிச்சயம் பெரிய வீரராக உருவெடுப்பார். உண்மையில் பண்ட் திறமை வாய்ந்த வீரர்தான் ஆனால் அவரை சரியான பாதைக்குக் கொண்டு சென்றால் அவரது முழு திறமை வெளிப்படும். எனவே சிறிது காலம் அவகாசம் கொடுத்தால் அவர் நிச்சயம் முழு திறனோடு வெளிப்படுவார். சர்வதேச கிரிக்கெட்டில் அவர் ஒரு மிகப்பெரிய வீரராகவும் மாறுவார் என்று அவருக்கு ஆதரவாக லாரா பேட்டி அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -