இந்த வருடம் டி20 உலகக்கோப்பையை கைப்பற்றும் அணி இதுதான் – லாரா பேட்டி

Lara

ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் மாதம் டி20 உலகக் கோப்பை நடைபெற உள்ளது. இந்த தொடர் அக்டோபர் 18ம் தேதி துவங்கி நவம்பர் 15ஆம் தேதி வரை சிறப்பாக நடைபெற உள்ளன. இதற்காக அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன.

Cup

இந்த டி20 உலகக் கோப்பைக்கான தொடருக்கு அனைத்து அணிகளும் வலுவான அணிகள் ஆகவே கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளாக திகழ்கின்றன. நடப்பு சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணியும் தற்போது அனுபவ வீரரான பொல்லார்ட் தலைமையில் சிறப்பாக விளையாடி வருகிறது.

ஆஸ்திரேலியாவில் போட்டி நடப்பதால் அந்த அணிக்கு கூடுதல் பலம். ஏனெனில் சொந்த மண்ணில் ஆஸ்திரேலிய அணி எப்பொழுதும் வலுவாகவே இருக்கிறது. அந்த வகையில் ஆஸ்திரேலிய அணிக்கு கோப்பையை வெல்ல வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இந்நிலையில் இந்த உலக கோப்பை டி20 தொடர் குறித்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் பிரையன் லாரா பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதுகுறித்து லாரா கூறியதாவது :

Ind

உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் இந்திய அணியும் ஒன்று. இந்திய அணி ஆடும் அனைத்து தொடர்களையும் வெல்ல தகுதியுள்ள அணி. மேலும் காலிறுதி, அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டி என முக்கியமான போட்டிகளில் இந்திய அணியை மற்ற அணிகள் எதிர்கொண்டே தீரவேண்டும் என்ற எதார்த்தத்தை எதிரணிகள் உணர்ந்துள்ளன என்றும் லாரா தெரிவித்துள்ளார்.

- Advertisement -