டெஸ்ட், டி20, ஒருநாள் என என்னுடைய 3 அணியிலும் இந்திய இளம் வீரரான இவருக்கு இடம் உண்டு – லாரா வெளிப்படை

Lara

தற்போதைய இந்திய அணியின் மிக முக்கிய வீரராக இளம் வீரரான கே.எல் ராகுல் இருந்து வருகிறார். ஐபிஎல் தொடரில் முதன்முதலில் பெங்களூர் அணிக்காக விளையாடிய இவர் தற்போது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார். விக்கெட் கீப்பராக இருக்கும் இவர் அந்த அணியின் கேப்டனாக பொறுப்பு ஏற்று வழி நடத்தி வருகிறார். அணி கடுமையான தோல்விகளைச் சந்தித்தாலும் ஒரு பேட்ஸ்மேனாக தொடர்ந்து தனது பங்களிப்பை அளித்து வருகிறார்.

Rahul

இந்த தொடரில் கே எல் ராகுல் 10 போட்டிகளில் விளையாடி 540 ரன்கள் எடுத்து இருக்கிறார். இந்த வருட ஐபிஎல் தொடரில் தற்போது வரை அதிக ரன் குவித்த வீரர் இவர்தான். மேலும் டெஸ்ட் டி20 ஒருநாள் ஆகிய மூன்று வடிவத்திற்கும் தேவையான ஒரு வீரர் அவர் தான் என்று மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் வீரர் பிரையன் லாரா புகழாரம் சூட்டியுள்ளார் அவர் கூறுகையில் …

இதுகுறித்து அவர் கூறுகையில் : கேஎல் ராகுல் எனது அனைத்து வடிவமான அணியிலும் கண்டிப்பாக இடம் பிடிப்பார். ஒரு கேப்டனாகவும் அணியை சிறப்பாக வழிநடத்துகிறார். துவக்கத்தில் அவரது அணி தோல்விகளை சந்தித்தாலும் தற்போது நன்றாகவே விளையாடி வருகிறது. அவர் பேட்டிங் செய்யும் விதம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது..

Rahul

ஒரு வீரராக அனைவரையும் எளிதாக ஒன்று இணைக்கிறார். 2018 ஆம் ஆண்டு முதல் 1777 ரன்கள் குவித்திருக்கிறார் கேஎல் ராகுல். ஐபிஎல் தொடரில் கடந்த மூன்று வருடங்களில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன் இதுதான். தொடர்ந்து அசத்தி வரும் இவர் அடுத்து இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆகவும் நிரந்தர இடம் பிடிக்க வாய்ப்பிருக்கிறது.

- Advertisement -