என்னுடைய காலத்தில் சிறந்த பேட்ஸ்மேன் மற்றும் ஆல்ரவுண்டர் இவங்க 2 பேர் தான் – லாரா கணிப்பு

Lara
- Advertisement -

கிரிக்கெட் வரலாற்றை எடுத்துப் பார்த்தால் அதில் யாரும் மறந்து விடாத மற்றும் மறக்க கூடாத பெயர் பிரைன் லாரா தான். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 22 ஆயிரம் ரன்களுக்கு மேல் பிரைன் லாரா டெஸ்ட் போட்டிகளில் 11 ஆயிரத்து 953 எங்களை கொடுத்துள்ளார் டெஸ்ட் போட்டிகளை பொருத்தவரையில் இவரது அதிகபட்ச ஸ்கோர் 400 ஆகும். டெஸ்ட் போட்டிகளில் இவரது ஆவரேஜ் 50 2.89 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 6.51 ஆகும்.

Lara

- Advertisement -

ஒருநாள் போட்டிகளில் மொத்தமாக இவர் 10405 ரன்கள் குவித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் இவரது அதிகபட்ச ஸ்கோர் 169 ஆகும். ஒருநாள் போட்டிகளில் இவரது அவரேஜ் 40 மற்றும் இவரது ஸ்டிரைக் ரேட் 79.51 ஆகும். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள பிரைன் லாரா தற்பொழுது வர்ணனையாளராக தனது பணியை செய்து வருகிறார். தற்போது நடந்து கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில் வர்ணனையாளராக பணிபுரிந்து வரும் லாரா அவரிடம் கேட்கப்பட்ட சில கேள்விகள் குறித்து பதில் அளித்துள்ளார்.

அதில் முதலாவதாக கேட்கப்பட்ட கேள்வி, உங்களுடன் இணைந்து பணிபுரியும் வர்ணனையாளர்கள் மத்தியில் மிகவும் நகைச்சுவை வாய்ந்த வர்ணனையாளர் யார் என்று கேட்கப்பட்டது.அதற்கு பதிலளித்துள்ள பிரையன் லாரா இங்கிலாந்தைச் சேர்ந்த கிரேம் ஸ்வான் மிகவும் நகைச்சுவை வாய்ந்த வர்ணனையாளர் என்று பதில் கூறியுள்ளார். அதற்குப்பின் கிரிக்கெட் வரலாற்றில் தலை சிறந்த கிரிக்கெட் வீரர் யார் என்று கேட்கப்பட்டது, அதற்கு வெவ்வேறு பதில்களை லாரா கூறியுள்ளார்.

Lara 1

கிரிக்கெட் வரலாற்றில் குறிப்பிட்டு ஒருவரை என்னால் கூறிவிடமுடியாது ஒவ்வொரு காலங்களுக்கு ஏற்ப சிறந்த வீரர்களை நான் கூறுகிறேன் என்று தனித்தனியே பதில்களை கூறியுள்ளார். முதலில் டான் பிராட்மேன் அவர்களை விளையாடிய காலகட்டத்தில் அவர்தான் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர் என்று கூறியுள்ளார். அதேபோல அவருக்குப் பின்னராக விளையாடிய வீரர்களை எடுத்துப்பார்த்தால், சர் கேரி சோபர்ஸ் மற்றும் சார் விவியன் ரிச்சர்ட்ஸ் என்று கூறியுள்ளார். விவியன் ரிச்சர்ட்ஸ் மிக சிறந்த பேட்ஸ்மேன் என்றும் கேரி சோபர்ஸ் மிகச் சிறந்த ஆல்ரவுண்டர் என்றும் கூறியுள்ளார்.

sachin 1

Kallis

அதன் பின்னர் தன்னுடைய சமகாலத்தில் விளையாடிய கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர் மிக சிறந்த பேட்ஸ்மேன் என்றும் அதேபோல காலேஜ் மிகச் சிறந்த ஆல்ரவுண்டர் வீரர் என்றும் பிரைன் லாரா தன்னுடைய பதிலை கூறியுள்ளார்.

Advertisement