எந்தக்காலத்தில் ஆடி இருந்தாலும் தற்போதைய இந்திய வீரரான இவரே கிரிக்கெட் உலகின் சூப்பர் ஸ்டார் – லாரா புகழாரம்

Lara
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது. தற்போது அடுத்த போட்டி நாளை விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரரான லாரா பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான கோலி எப்படி தன்னுடைய பேட்டிங் திறமைகளை பட்டை தீட்டி கொள்கிறார் என்று எனக்கு தெரியவில்லை. அவருடைய திறமையை பார்த்தால் எனக்கு எப்போதும் வியப்பாகவே இருக்கும். எந்த நூற்றாண்டில் எந்த அணியில் இருந்தாலும் கோலியின் திறமைகள் நிச்சயம் வெளிப்பட்டிருக்கும்.

அவர் ஒரு அற்புதமான வீரர் மேலும் இந்திய அணியை சாதனைகளை நோக்கி நடைபோட வைத்துக்கொண்டிருக்கும் கேப்டன் கோலி சர்வதேச அளவில் பல சாதனைகளை தொடர்ச்சியாக புரிந்து வருகிறார். மேலும் கோலியின் சாதனைகளை அனைத்து முன்னாள் இந்நாள் வீரர்களும் கவனித்துக் கொண்டு வருகின்றனர்.

Kohli-2

என்னைப்பொருத்தவரை கோலியை நான் பார்க்கும் பொழுது கால்பந்தாட்ட சூப்பர் ஸ்டார் ஆன ரொனால்டோ தான் ஞாபகத்திற்கு வருகிறார். கோலி ரொனால்டோவின் நகளாகவே நான் கருதுகிறேன். தன்னுடைய பேட்டிங் திறமை மட்டுமின்றி உடற்தகுதி சரியாக வைத்திருக்கும் கோலி நம்பமுடியாத அளவிற்கு பிட்னஸ் மற்றும் மன வலிமையோடும் உள்ளார். கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய ஜாம்பவான்கள் உடன் அவரது பெயரும் நிச்சயம் இடம்பிடிக்கும்.

Kohli

மேலும் அவருடைய ஆட்டத்துடன் அனைத்து ஜாம்பவான்களின் ஆட்டமும் ஒத்துப்போகும் அளவிற்கே கோலியின் பேட்டிங் திறமை உள்ளது. நம்பமுடியாத ஆட்டம் ஒவ்வொரு நாளும் என்னை பிரமிக்கவும், வியக்கவும் வைக்கிறது என்று லாரா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement