இவர் விக்கெட்டை வீழ்த்துவது கஷ்டம். சொல்லிவைத்து 1 மணி நேரத்தில் சதமடிப்பார் – இந்திய வீரரை புகழ்ந்த பாலாஜி

Balaji
- Advertisement -

கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக பல மாதங்களாக கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாமல் இருக்கும் இந்நிலையில் இந்தியாவின் முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது கிரிக்கெட் குறித்த அனுபவங்களையும், கருத்துக்களையும் பேட்டியாக அளித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரரும், தமிழக வேகப்பந்து வீச்சாளர்கள் பாலாஜி இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் உடன் நேரலையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார்.

Balaji 1

- Advertisement -

அந்தப் பேட்டியில் பல்வேறு விஷயங்களை பகிர்ந்துகொள்ள பாலாஜி ஒரு சுவாரசியத் தகவலை பகிர்ந்து கொண்டார். அதன்படி அவர் பேசுகையில் தமிழக வீரரும், இந்திய முன்னாள் வீரருமான பத்ரிநாத் குறித்த மிக சுவையான பல விடயங்களை பகிர்ந்து கொண்டார். அதில் அவர் கூறியதாவது :யாராவது விளையாட்டாக நான் சதம் அடிக்க போகிறேன் என்று சொல்லிவிட்டு களத்தில் இறங்கி விளையாடியதைப் பார்த்து இருக்கிறீர்களா ?

ஆனால் நான் பார்த்திருக்கிறேன். 2005 பத்ரிநாத் என்னிடம் இன்று சதம் அடிக்கப்போகிறேன் என்று சொல்லிவிட்டு களமிறங்கி தான் கூறியது போலவே அந்த குறிப்பிட்ட போட்டியில் சதத்தை அடித்தார். அவரை பல கோணங்களில் பல ஆண்டுகளாக பார்த்து பார்த்திருக்கிறேன். அவரது விக்கெட்டை வீழ்த்துவது பவுலர்களுக்கு மிக சிரமமாக இருக்கும் என்று பாலாஜி கூறியுள்ளார்.

Balaji

மேலும் ஒரு போட்டியில் என்னிடம் ஒரு மணி நேரத்தில் சதம் அடிக்கிறேன் என்று சொல்லி விட்டு அதை செய்தும் காட்டினார். மேலும் நான் எந்த பவுலரின் பந்து வீச்சில் எத்தனை ரன்கள் அடிக்கப் போகிறேன் என்று கூட சரியாக சொல்லும் திறமை படைத்தவர் பத்ரிநாத். அந்த அளவிற்கு அவரால் பேட்டிங் செய்ய முடியும். மேலும் பேசிய பாலாஜி கூறுகையில் :

Badrinath

பத்ரிநாத் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமல்ல டி20 போட்டிகளிலும் கூட தன்னால் விளையாட முடியும் என்று ஐபிஎல் தொடரில் நிரூபித்தார். பேட்டிங் நுட்பத்தில் அவர் மிகவும் புத்திசாலி அவரின் விக்கெட்டை எளிதாக வீழ்த்த முடியாது. மேலும் ரஞ்சி போட்டியிலும் கூட ஒரு பாதி ஆட்டத்தில் சதம் அடிக்க முடியும் என்று நிரூபித்தவர் அவர் என்று பாலாஜி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement