அறிமுக போட்டியின் 2 ஆவது இன்னிங்சில் இரட்டை சதம். வெஸ்ட் இண்டீஸ் வீரர் வரலாற்று சாதனை – விவரம் இதோ

mayers
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் தற்போது பங்களாதேஷ் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டி சட்டோகிராமில் இன்று நடைபெற்று முடிவடைந்தது. இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் பங்களாதேஷ் அணி 430 ரன்களை குவிக்க, அடுத்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 259 ரன்கள் மட்டுமே குவித்தது.

wi

- Advertisement -

இதனால் 170 ரன்கள் என்ற பெரிய முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை துவங்கிய பங்களாதேஷ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 233 ரன்களை குவித்தது. இதனால் 370 ரன்கள் எடுத்தால் என்ற வெற்றி இலக்கு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 ரன்களை பெரிய இலக்கு என்பதால் நிச்சயம் வெஸ்ட் இண்டீஸ் இந்த போட்டியில் தோல்வி அடையும் என்று பலரும் நினைத்திருந்தனர்.

ஆனால் அப்போதுதான் வெஸ்ட் இண்டீஸ் அணியின் புதிய நாயகன் அறிமுகமானார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் துவக்க வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க அப்போது அறிமுக வீரராக ஐந்தாவது நிலையில் இறங்கிய கைல் மேயர்ஸ் இன்று ஆடிய ஆட்டம் கிரிக்கெட் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது என்று கூறலாம்.

mayers 2

ஏனெனில் அறிமுக வீரராக இறங்கிய ஒரு வீரர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக இறுதிவரை நின்று ஆட்டமிழக்காமல் 210 ரன்கள் அடித்தது மட்டுமின்றி அணியையும் வெற்றிகரமாக வெற்றிக்கு அழைத்துச் சென்றுள்ளார். இவரின் இந்த சிறப்பான ஆட்டம் பலரது பாராட்டை பெற்று வருகிறது மேலும் கிரிக்கெட் வரலாற்றில் செய்யப்பட்ட மிகப் பெரிய சேசிங்கில் ஒரு போட்டியாகவும் இந்த போட்டி பார்க்கப்படுகிறது.

mayers 1

கைல் மேயர்ஸ்ஸின் இந்த சிறப்பான ஆட்டத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. முதல் டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்து மட்டுமின்றி இரண்டாவது இன்னிங்சில் இரட்டை சதம் அடித்த வீரர் என்ற பல பெருமையை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement