யார் இந்த ஜேமிசன் ? 8 ஆவது டெஸ்ட் போட்டியிலேயே இவர் படைத்த சாதனை தெரியுமா ? – விவரம் இதோ

Jamieson
- Advertisement -

கடந்த 18ஆம் தேதி இங்கிலாந்தில் உள்ள ஏஜஸ் பவுல் மைதானத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையே டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி தொடங்கப்பட்டது. இந்த போட்டயின் மூன்றாவது நாளான நேற்று, சிறப்பாக பந்து வீசிய நியூசிலாந்து அணியின் வேகப் பந்து வீச்சாளரான கைல் ஜேமிசன், மிகப் பெரிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். முதல் நாள் ஆட்டம் மழையின் காரணமாக டாஸ்கூட போடாத நிலையில் மொத்தமாக கைவிடப்பட்டது. இரண்டாவது நாள் ஆட்டத்தில் டாஸ் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணியின் கேப்டனான கேன் வில்லியம்சன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

kohli rahane

- Advertisement -

அதன்படி தனது முதல் இன்னிங்சில் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள், நியூசிலாந்து அணியின் வேகப் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 217 ரன்களுக்கே ஆல் அவுட்டாகி இந்திய ரிசகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளனர். தனது எட்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் நியூசிலாந்து அணியின் வேகப் பந்து வீச்சாளரான கைல் ஜேமிசன் விராட் கோஹ்லி, ரிஷப் பன்ட், ரோஹித் சர்மா ஆகியோரின் விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

அது மட்டுமல்லாமல், முதல் இன்னிங்சில் ஐந்து விக்கெட்டுகளையும் கைப்பற்றிய அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பான சாதனை ஒன்றினையும் நிகழ்த்தியுள்ளார். கைல் ஜேமிசன் டெஸ்ட் போட்டிகளில் ஒரு இன்னிங்சில் ஐந்து விக்கெட்டுகள் எடுப்பது இது ஐந்தாவது முறையாகும். இதன்மூலம் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகிய பின்னர், குறைந்த போட்டிகளிலேயே ஐந்து முறை ஐந்து விக்கெட் எடுத்த நியூசிலாந்து வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

Jamieson 2

26 வயதான கைல் ஜேமிசன், இதுவரை எட்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 44 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதில் ஒரு இன்னிங்சில் ஐந்து விக்கெட்டுகளை 5 முறையும், ஒரு போட்டியில் 10 விக்கெட்டுகளை ஒரு முறையும் எடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இறுதிப் போட்டியின் மூன்றாவது நாளான நேற்றைய ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணியானது 2 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்திருக்கிறது.

Jamieson 1

கைல் ஜேமிசன் ஏற்கனவே இந்த இறுதிப்போட்டியில் இந்திய அணிக்கு எதிராக சிறப்பாக பந்துவீசுவார் என்று கணிக்கப்பட்ட நிலையில் தன்னுடைய பலத்தை அவர் இந்த போட்டியின் மூலம் மீண்டும் ஒருமுறை காண்பித்துள்ளார். அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் அனுபவ வீரரான ராஸ் டெய்லர் ஆகியோர் நாட் அவுட் பேட்ஸ்மேன்களாக இருக்கின்றனர்.

Advertisement